பக்கம்:பிறந்த மண்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - - 101

பார்க்கப்போனால், கிரகரீதியான தொடர்புகூட இதில் இருக்கும் போலிருக்கிறது. அன்றைக்கு உங்கள் பெண்ணுக் குச் சரியான நீர்க்கண்டம். தண்ணிரில் மிதந்தபோது தற்செயலாக அந்தப் பையன் வந்து காப்பாற்றியிருக் கிறான். எல்லாவற்றையும் மொத்தமாகச் சேர்த்து நினைத் துப் பார்க்கும்போது இந்தச் சம்பந்தம் நம் சக்திக்கும் அடங் காமல் தானே நடக்கத் தெய்வசங்கல்டமே துணை செய்ய லாமென நினைக்கிறேன்.” -

“என்னவோ, உங்கள் மனத்தில் படுகிறதை நீங்கள் சொல்கிறீர்கள். எல்லாம் நடக்க நடக்க்ப் பார்க்கலாம்! நம் கையில் என்ன இருக்கிறது?” -

ஆச்சியும் மணியக்காரரும், இப்படிப் பேசிக்கொண் டிருந்தபோது, 'அம்மா! வாசலிலிருந்து யாரோ எட்டிப் பார்க்கிற மாதிரித் தெரிகிறதே"-என்று சொல்லிக் கொண்டே யாரென்று பார்ப்பதற்காகச் சென்றாள் கோமு, சரி. நானும் இப்படிப் போய்விட்டு வருகிறேன். கோயிலில் நாலு வாரமாகப் படித்தரக் கணக்கு எழுதாமல் சுமந்துகிடக்கிறது. அந்தப்பிள்ளையாண்டான்.அழகிய நம்பிக் குப் பதில் கடுதாசி எழுதினால் நான் ரொம்ப விசாரித்த தாக ஒரு வரி சேர்த்து எழுதுங்கள்’’-என்று சொல்லிவிட்டு எழுந்திருந்து புறப்பட்டார் பெருமாள் கோயில் மணியக் காரர். அந்தச் சமயத்தில் எட்டிப் பார்த்தது யாரென்று பார்ப்பதற்காக வாயிற்புறம் சென்றிருந்த கோமு அழகிய நம்பியின் தாய் முத்தம்மாள் அண்ணியை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தாள். இட்டிலிக் கடைக்குள் ஆண் குரலைக் கேட்கவே உள்ளே நுழையலாமா, கூடாதா என்று வாசலில் தயங்கி நின்றிருக்கிறாள் அந்த அம்மாள், உள்ளே யிருந்து வாயிற்புறம் நிற்பது யாரென்று பார்ப்பதற்காக வந்த கோமு, "என்ன அத்தை! இங்கே நிற்கிறீர்கள், உள்ளே வரக்கூடாதா? நன்றாயிருக்கிறது, நீங்கள் செய்கிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/103&oldid=596810" இலிருந்து மீள்விக்கப்பட்டது