பக்கம்:பிறந்த மண்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 103

பெண் பெரியவளான பின் இப்போதுதானே உங்கள் கண் களில் பட்டிருக்கிறாள்! அதனால் உங்களுக்குப் பிரமிப்பாக இருக்கிறது!’-ஆச்சி பதில் கூறினாள். -

"எனக்கு எங்கே வர ஒழிகிறது! உங்கள் சிறிய பெண் கோமுவைத்தான் எப்போதாவது தெருவில் இல்லாவிட் டால் கோயிலில் பார்ப்பேன்.நீங்களும் வெளியில் நடமாட்ட மில்லையா? அதனால் பழக்கமே விட்டுப் போயிற்று.”

“என்னவோ, இன்றைக்காவது வர வழி தெரிந்ததே உங்களுக்கு. எங்கள் பாக்கியந்தான்.”- . .

"அழகியநம்பி கடிதம் எழுதியிருக்கிறான். ஒர் அவசர காரியமாக உங்களிடம்தான் உதவியை எதிர்பார்த்து வந்தி ருக்கிறேன். இல்லையென்று சொல்லக்கூடாது'-என்று பீடிகையோடு பேச்சைத் தொடங்கினாள் முத்தம்மர்ள் அண்ணி. - -

ஆந்த அம்மாள் தன் வீட்டைத்தேடி வந்ததே கிடைத் தற்கரிய பாக்கியம் என்றெண்ணிக் கொண்டிருந்த காந்திமதி ஆச்சிக்கு இந்த வேண்டுகோள் இன்னும் வியப்பை அளித்தது. பக்கத்தில் நின்று கேட்டுக்கொண்டிருந்த பெண் பகவதியின் இளம் நெஞ்சமோ தானாகக்கற்பித்துக்கொண்ட சில இனிய நினைவுகளால் நிறைந்து கொண்டிருந்தது.

12. அன்பின் அலைகள்

திடீரென்று இரண்டு வெள்ளைக் காரப் பெண்கள் வந்த தையும் அழகியநம்பி சிரித்துக்கொண்டே ஆங்கிலத்தில் பேசி அவர்களை வரவேற்றதையும் அந்தப் பெண்கள் மிகவும் உரிமையோடு அவனுக்குப் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்து கொண்டதையும் பார்த்தபோது சமையற்கார சோமுவுக்கு என்னவோபோல் இருந்தது. நன்கு படித்த மனிதர்களுக்கு நடுவே படிக்காத ஒருவன் அகப்பட்டுக் கொண்டால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/105&oldid=596814" இலிருந்து மீள்விக்கப்பட்டது