பக்கம்:பிறந்த மண்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பிறந்த மண்

அவனும் சோமுவும் ஏறிக் கொண்டனர். அவர்களும் ஏறிக் கொண்டார்கள். துரத்தில் கடலின் அலைகள் கரை யோரத்து மின்சார விளக்கொளியில் மின்னின. கார் சென்றது.

13. பூர்ணாவின் அதிகாரம்

மறுநாள் காலை முதல் அழகியநம்பியின் உத்தியோக வாழ்க்கை அந்தக் கடைக்குள் ஆரம்பமாகியது.பிரமநாயகம் பஞ்சாங்கத்தைப் புரட்டி நல்ல வேளை பார்த்து அவனை அழைத்துக்கொண்டு போய் பூர்ணாவின் அறைக்குள் உட் கார்த்தினார். அவனுக்கென்று தனி மேஜை, தனி நாற்காலி எல்லாம் அங்கே தயாராகப் போட்டு வைக்கப்பட்டிருந்தன. அன்றுவரை அந்தப் பெண்ணின் தனியுரிமையாக இருந்த அந்த அறையில் உரிமையின் முதல் தடையாக அழகியநம்பி நுழைந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். .

வழக்கமாக பத்துமணிக்குள் கடைக்கு வந்துவிடும் பூர்ணா அன்று பத்தேகால் ஆகியும் வரவில்லை. புதிதாகக் கொண்டு வந்து உட்கார்த்தப்பட்டிருந்த அழகியநம்பி தனி யாகக் கணக்கு வழக்குகளைப் புரட்டிக் கொண்டிருந்தான், அந்த இடத்தில் இருப்புக் கொள்ளாது டோலிருந்தது அவ னுக்கு, ஒவ்வொரு விநாடியும் அவள்வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் அவன். வெளியே ஒரு சிறிய ஓசை கேட் டாலும் அவள்தான் வந்துவிட்டாளோ, என்று கணக்குப் புத்தகங்களை மூடிவைத்துவிட்டு நிமிர்ந்து சரியாக உட்

கார்ந்து கொள் வான்.

படிப்பு, சிந்தனையுணர்ச்சி, தைரியம், நேர்மைக்கு மாறான எந்தச் செயல்களுக்கும் அஞ்சாமை,-இவ்வளவு பண்புகளும் அழகியநம்பி என்ற அந்த இளைஞனிடத்தில் அமைந்திருந்தன. ஆனால், இப்போது அவன் ஒர் இளம் பெண் தன் அறைக்குள் நுழைந்து வர்ப்போகிற நேரத்ை எதிர்பார்த்து நடுங்கிக் கூசி உட்கார்ந்திருந்தான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/114&oldid=597145" இலிருந்து மீள்விக்கப்பட்டது