பக்கம்:பிறந்த மண்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நர். பார்த்தசாரதி ità

"அப்படித்தான் அந்தப் பூர்ணா” என்ன புலியா? சிங்கமா? அவளுக்கு நான் ஏன் பயப்பட வேண்டும்? அவள் என்னைக் கடித்தா விழுங்கிவிடப் போகிறாள்' அவன் தானாகவே தன்னை தைரியப்படுத்திக் கொள்வதற்கு முயன் றான். அறைக்குள் எல்லாப் பவிஷ-களும் இருந்தன. ஒன் றுக்கும் குறைவில்லை. மின்சார விசிறி சுழன்று கொண்டு தான் இருந்தது, விளக்கொளி பிரகாசித்துக் கொண்டுதான் இருந்தது. ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஊதுவத்திப் புகையின் நறுமணம் பரவியதாலோ என்னவோ, அந்த அறையில் எப்போதும் நாசிக்கினிய ஒருவகை மணம் நிறைந் திருந்தது, -

மேஜைமேல் விரித்துக் கிடந்த பைல்களையும், தடிமன், தடிமனான பேரேட்டுக் கணக்குப் புத்தகங்களையும் அப்படியே போட்டு விட்டு அந்த நிமிடம் வரை தனக்கு ஏற்படாத ஒருவகைத் துணிச்சலை வலுவில் வரவழைத்துக் கொண்டான் அவன். எழுந்திருந்து அந்த அறை முழுதும், ஒவ்வொரு மூலைமுடுக்குகளையும் ஆராய்ந்து பார்க்க

ஆரம்பித்தான். • . .

பிரமநாயகம் அவனை அந்த அறைக்குள் முதன் முத லாகக் கொண்டுவந்து விட்டுச் சென்றவுடனேயே அவன் இந்த விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கலாம். அவன் அப்படிச் செய்யாமல் பிரமநாயகம் உட்கார்த்தி விட்டுப் போன நாற்காலியிலேயே உட்கார்ந்து வேலையைக் கவனிக்கத் தொடங்கிவிட்டான். பூர்ணா அப்போது அந்த அறையில் இல்லாவிட்டாலும் அவளுடைய, அல்லது அவ ளைச் சேர்ந்த ஏதோ ஒரு விசேட சக்தி அந்த அறையைக் கண்காணித்துக் கொண்டிருப்பது போன்ற மனப்பிரமையும், கலவரத்தோடு கூடிய பயமும், அவனுக்கு இருந்தன. அத னால்தான் அறையில் வேறு யாருமில்லாவிட்டாலும் யாருக்கோ அடங்கி உட்கார்ந்து கொண்டு வேலை செய்கிற மாதிரி உட்கார்ந்த இடத்தை விட்டு அசையாமல் அந்த அறையின் சூழ்நிலை எப்படி அமைந்திருக்கிறது என்பதைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/115&oldid=597147" இலிருந்து மீள்விக்கப்பட்டது