பக்கம்:பிறந்த மண்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 115

தனியாக ஒருத்தி இவ்வளவு வேலைகளையும் ஒழுங். காகச் செய்துகொண் டு,-அதே சமயத்தில் அங்குள்ள மற்றவர்களை ஆட்டிவைத்து அதிகாரம் செய்யவும் எப்படி முடிந்தது என்று அவன் வியந்தான்

அவள் வழக்கமாக உட்காரும் நாற்காலிக்கு ப் பின்புற, மிருந்த அலமாரி ஒன்று பூட்டியிருந்தது. அதற்குள் ஏதாவது முக்கியமான பொருள்கள் இருக்கவேண்டுமென்று நினைத் துக் கொண்டான் அவன். மேஜை டிராயர்களும்.அதே போல் பூட்டப்பட்டிருந்தன. மேஜைமேல் டைப்ரைட்டர் அதற்குரிய தகரக் கூட்டால் மூடிவைக்கப்பட்டிருந்தது. சில கடிதங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பக்கத்தில் வேறு சில கடிதங்கள் அனுப்புவதற்காக டைப் செய்து முடித்து வைக்கப்பட்டிருந்தன. பத்தே நிமிஷங்களில் அந்த அறையின் ஒவ்வொரு பகுதியையும் தன் பார்வையால் அளந்து . கொண்டு தனக்குரிய இடத்தில் போய் உட்கார்ந்து கொண் டான் அழகிய நம்பி.

அவன் உட்கார்த்து சில விநாடிகள்ே கழிந்திருக்கும் ஸ்பிரிங் கதவு திறக்கும் ஓசை கேட்டது. குனிந்து “பை லைப். புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தவன் யார் என்று பார்ப் பதற்காகத் தலைநிமிர்ந்தான். அந்த ஒரு கணத்திற்குள் அவன் நெஞ்சு அடித்துக் கொண்ட வேகம் சொல்வி முடியாது .

பூர்ணா தான் வந்தாள். ஒரு கையில் அலங்காரப்பை இன்னொரு கையில் அழகிய சிறிய ஜப்பான் குடை. அவன் உட்கார்ந்து கொண்டிருப்பதை அவள் பார்த்துவிட்டாள். ஆனால், அதற்குரிய வியப்போ, மாறுதலோ, சினம்ோஏதாவது ஒர் உணர்ச்சி சிறிதாவது அவன் முகத்தில் உண்டாகவேண்டுமே இல்லவே இல்லை

அழகியநம்பிதான் தன்னையறியgழலே தான் என்ன செய்கிறோம் என்ற நினைவே இல்லாமல் எழுந்து நின்று கொண்டிருந்தான். அவள் உள்ளே துஒழயும்போது தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/117&oldid=597152" இலிருந்து மீள்விக்கப்பட்டது