பக்கம்:பிறந்த மண்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ił8 பிறந்த மண்

மறுபடியும் கெஞ்சுகிற iாவனையில் மெல்லிய குரலில் தன் நடிப்பைத் தொடர்ந்தான். அவன். அக்கறையோடு மேற்கொள்ளப்பட்ட அவனுடைய *... " நடிப்பும் பேச்சும் வீணாகி விடவில்லை.

பூர்ணாவின் முகம் மலர்ந்தது.அவள் மெல்லச்சிரித்தாள். அதுதந்திரமான சிரிப்பாக இருந்தது. "மிஸ்டர் அழகிய நம்பி! நீங்கள் இடத்தில் போய் உட்கார்ந்து வேலையைக் கவனியுங்கள். நான் உங்களைப்பற்றி எதுவும் சொல்வதற்கு முன் நீங்களாகவே ஏன் பயப்படுகிறீர்கள்? என்னால் உங்க ளுக்கு ஒரு துன்பமும் நேராது. நீங்கள் என்னோடு ஒத்துழைக் கத் தயாராயிருக்கும்போது நான் மட்டும் உங்களுக்குத் துன்பம் செய்வேனா..? நாம் இன்று மாலை வெளியே ஒர் இடத்தில் தனியாகச் சந்தித்து நம் நிலைகள் பற்றிப் பேசிக் கொள்வோம். இங்கே வேண்டாம். நான் சொல்கிற வேலை களை நீங்கள் மறுக்காமல் உடனுக்குடன் செய்துகொண்டு வாருங்கள்'-என்றாள் பூர்ணா. அவன் தலையை ஆட்டினான். உள்ளுற அவள் மனம் கறுவிக் கொண்டது. இரு மகளே! இரு உன்னை வழிக்குக் கொண்டு வருகிற விதமாகக் கொண்டு வருகிறேன்!-என்று எண்ணிக் கொண்டான்.

அழகியநம்பியின் பணிவையும் அடக்கத்தையும் கொண்டு அவனைக் கையாலாகாதவன் என்றும் ஏழை என்றும் தவறாக அனுமானம் செய்துகொண்ட் பூர்ணா அவனைத் தாராளமாக அதிகாரம் செய்தாள். அவளுடைய அனுமான மும் தவறல்லவே! பணத்தினால், அவன் ஏழைதான்! அறிவினால் கூடவா அவன் ஏழை?. * -

மறுபேச்சுப் பேசாமல்-சொன்ன வார்த்தைக்கு எதிர் வார்த்தை சொல்லாமல் சிரித்துக்கொண்டே அவள் ள்துைச் சொன்னாலும் எதற்கு ஏவினாலும்-கீழ்ப்படிந்து அவ்ற்றைச். செய்துவிடுவது என்ற முடிவிற்கு வந்திருந்தான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/120&oldid=597249" இலிருந்து மீள்விக்கப்பட்டது