பக்கம்:பிறந்த மண்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பிறந்த மண்

பறிந்து நடந்துகொள்ளத் தெரியவேண்டாமோ? அழிகுக் 'காகவா நான் அந்த இடத்தில் மேசை நாற்காவியைப் போட்டேன்? ஒரு காரணத்துக்காக வேண்டுமென்றுதானே அப்படிச் செய்திருந்தேன்?" -- -

அவர் இவ்வளவு டேசியபின்பும் தான் பேசாமல் நின்று கொண்டிருந்தால் தவறாக எண்ணிக் கொள்வதற்கு இடம் கொடுத்ததாக முடியும் என்று அவன் உணர்ந்தான்.ஆனால் நா எழவில்லை. நீங்கள் நினைப்பது போல் நான் பூர்ணா வின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அடங்கிவிடவில்லை.நான் எப்போதுமே உங்கடைய ஆள் என்பதை மறந்துவிடமாட் டேன். அந்தப் பெண்ணிடம் ஒரு மாதிரி முரட்டுத்தனமான சூழ்ச்சி அமைந்திருக்கிறது. அவளை அடக்கி வ்ழிக்குக் கொண்டு வரவேண்டுமானால் விட்டுக் கொடுத்துப் பணிந்து தான் போகவேண்டியிருக்கிறது”-என்றெல்லாம் தன் மனத் தில் அடங்கிக் கிடக்கும் செய்திகளை அவரிடம் சொல்லி விடுவதற்கு வார்த்தைகளைத் திரட்டிக் கொண்டான். அவற்றை அவரிடம் சொல்லிவிடவேண்டுமென்று அவன் நாக்குத் துடிதுடித்தது. ஆனால், சொல்லவில்லை, சொல் லும் துணிவு வரவில்லை. பேசாமல் தண்லகுனித்துகொண்டு நின்றான் - -

என்ன தம்பி! செய்வதையும் செய்துவிட்டுப் பதில் சொல்லாமல் விழித்துக்கொண்டு நிற்கிறாயே! உனக்க்ே நன்றாயிருக்கிறதா இது?--குரலில் கடுமையைக் குறைத்து அருகே வந்து மெல்ல அவனை நயந்துகொண்டு வினாவு கிறவர் போல் வினாவினார் அவர். அழகியநம்பி தலை நிமிர்ந்தான். இல்லை...இது...வந்து ஒரு காரணத்திற் காகத்தான் செய்தேன். நான் இங்கே மாற்றிப் போட்டுக் கொள்ளாவிட்டால் அவள் மாற்றிப் போட்டுக் கொண்டு விடுவாள் போலிருந்தது. அவள் இட்ம் மாறி உட்கார்ந்து ஒதுங்கிக் கொண்டுவிட்டால் அப்புறம் நீங்கள் சொன்ன தாரியங்களில் ஒன்றைக்கூட நான் செய்யமுடியாமல் போய்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/124&oldid=597261" இலிருந்து மீள்விக்கப்பட்டது