பக்கம்:பிறந்த மண்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பிறந்தமல்

களோ, அவற்றையெல்லாம் இப்போதிருந்தே ஒவ்வொன் அாகக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறேன். முக்கியமான வற்றை அவ்வப்போது குறித்தும் வைத்துக்கொண்டிருக் கிறேன்.” - -

“நல்லது அதை பொறுமையோடு தொடர்ந்து செய்து கொண்டுவா...' என்று சொல்லியப்டி புறப்படக் கதவைத் திறந்தவர் மறுபடியும் நாலைந்தடி நடந்து வந்து அவனை அருகே அழைத்து, இன்னொரு செய்தி உன்னிடம் கூற மறந்துவிட்டேனே? நான் இப்போது ஐந்து மணிக்குக் கண் டிக்குப் போகிறேன். வியாபார சம்பந்தமான ஒரு முக்கிய காரியம். திரும்ப இரண்டு நாள் ஆகும். கவனமாகப் பார்த் துக்கொள்!"-என்று கூறினார். ஆகட்டும்! பார்த்துக்

கொள்கிறேன்!-என்றான் அவன்,

'இப்போது நீ எங்காவது வெளியில் போகப் போகி, றாயா?” . .

"ஆமாம்! ஆறுமணிக்குப் பூர்ணா வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கிறாள். போக வேண்டும்-இப்படிப் பதில் சொல்ல இருந்தான் அவன். சொற்கள்கூட நாவின் துன் வரையில் வந்து விட்டன. நல்லவேளை, தன்னைச் சமாளித்துக்கொண்டு அதையே வேற்ொரு விதமாக மறைத்துச் சொன்னான். நேற்றுச் சில இடங்களைச் சுற்றிப் பார்க்க முடியவில்லை. இன்று ஆறு, மணிக்கே கிளம்பலாம் என்றிருக்கிறேன்." r

'அதற்கென்ன; போய்விட்டு வர்யேன்."-கூறிவிட்டு வெளியேறிச் சென்றுவிட்டார் அவர். ஆற்றுமுன் தான் அவருக்குச் சொல்வத்ற்கிருந்த பதிலை எண்ணிப் பார்த்த போது, தான் பிரமநாயகத்திடம் வசமாகச் சிக்கிக் கொள்வ தற்கு இருந்தது அவனுக்கு நினைவு வந்தது. வெறும் 'வாயை மென்று கொண்டிருப்பவருக்கு அவல் வேறு கிடைத்துவிட்டால் கேட்க வேண்டுமா? ஏற்கெனவே பூtiாவின் ஆனாக நான் மாறி அவன் வாயில் சிக்கிவிடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/126&oldid=597263" இலிருந்து மீள்விக்கப்பட்டது