பக்கம்:பிறந்த மண்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 127

இயல்பாக வந்து கலந்தன. அதைச் சுவையோடு அனுப வித்துக் கேட்டான் அழகியநம்பி. அந்தத் தமிழ்ப்பேச்சின் புதுமைக்கு. அந்த இளைஞரின் கள்ளங்கபடமற்ற சூதுவா தில்லாத அன்புக்கு, தன் மனத்தையும், அதிலிருந்த அளவற்ற அன்பையும் மொத்தமாக விலை கொடுத்து விட்டான் அழகியநம்பி. இந்த இளைஞரின் அழகான, சிரிப்புக் கொஞ்சும் முகத்தையே அன்று முழுதும் பார்த்துக் கொண்டிருக்கலாம் போலிருந்தது. ஒர் அரைமணி நேரம், தமிழ்இலக்கிய உலகம்,வியாபார நிலவரம், சமய வளர்ச்சிஆகிய பல திறப்பட்ட செய்திகளைப் பற்றியஉரையாடலில் சுற்றிவந்தனர் அவர்கள் இருவரும்.

தி டரென்று பூர்ணாவின் வீட்டிற்கு வருவதாக ஒப்புக் கொண்டிருந்தது அவனுக்கு நினைவு வந்தது. அதுவரை அந்த இளைஞரின் இனிய பழக்கத்தில் தன்னை மறந்து போயிருந்த அவன் அற்ைக்குள் மாட்டியிருந்த சுவர்க் கடிகாரத்றை நிமிர்ந்து பார்த்தான், நேரத்தைக் கடக்க விட்டுவிட்டோமே!-என்று உணர்ந்துகொண்டதற்கு உரிய பேரபரப்பின் சாயல் அவன் முகத்தில் உண்டாயிற்று.

அழகியநம்பியின் முகத்தில் உண்டான அந்தக் குறிப்பின் மாறுதலைப் புரிந்துகொண்ட இளைஞர் சபாரத்தினம், 'நீங்கள் எங்காவது வெளியே புறப்பட்டுப் போவதற்கு இருந்தீர்களோ? அட்டா; நான் நேரந்தெரியாமல் வந்து உங்களுக்குத் தொல்லை கொடுத்துவிட்டேன் போலிருக் கிறது!"-என்று வருந்திக் கூறினார்

"அதெல்லாம் ஒன்றுமில்லை! உங்களைச் சந்தித்தது, உங்களோடு உரையாடியது-இவற்றைக் காட்டிலும் முக்கியமான எந்தக் காரியத்திற்காகவும் நான் புறப்பட்டுக் கொண்டிருக்கவில்லை.இன்னும் ஐத்து நிமிடங்கள் கழித்துக் கூட நான் புறப்படலாம். ஆறு, ஆறரை மணி சுமாருக்கு ஒருவரைச் சந்திக்க வருவதாகச் சொல்லியிருக்கிறேன்என்று சொல்லிக்கொண்டே இடத்தைவிட்டு எழுந்திருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/129&oldid=597270" இலிருந்து மீள்விக்கப்பட்டது