பக்கம்:பிறந்த மண்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பிறந்த மண்

தான் அழகியநம்பி. இளைஞர் சிபாரத்தினமும் விடை பெற்றுக் கொள்வதற்காக எழுந்திருந்தார்

"உங்களை நான் இன்று இங்கே கண்டு பேசியதுபோல் எங்கள் வீட்டிலும் எல்லாரும் கண்டு பேச் ஆவலாயிருப் பார்கள். நீங்கள் ஒரு ஞாயிற்றுக்கிழமை எங்களுடைய வீட்டிற்குச் சமூகமளிக்கவேண்டும்.’’- - 'ஆகட்டும்! கட்டாயம் வருகிறேன்"-என்று சிரித்துக் கொண்டே தலையை அசைத்தான் அழகிய நம்பி. அந்த இளைஞரின் சிரிப்பில் ஒருவிந்தை நிறைந்த பண்பு இருப்பதை அவன் கண்டான். அந்தச் சிரிப்பைக் காண்கின்றவர்கள். எத்தகைய கடுமையானவர்களாயிருந்தாலும், அவர்களை யும் தம்மையறியாமலே பதிலுக்குச் சிரிக்க வைக்கும் ஒரு தன்மை சபாரத்தினத்தின் சிரிப்பிற்கு இருந்தது. சட்டைப் பையிலிருந்த பூர்ணாவின் விளிட்டிங் கார்டை எடுத்து அதில் குறிப்பிட்டிருந்த முகவரியைப் பார்த்தான். அதில் இருந்த தெருவின் பெயரையே அவன் அப்போதுதான் படித்தான். அந்தத் தெருவிற்குத் தான் மட்டும் தனியாக ‘எப்படிப் போவது? எப்படி அவள் வீட்டைக் கண்டுபிடிப்பது? -என்ற மலைப்பு அவனுக்கு ஏற்பட்டது. சோமுவைக் கூட்டிக் கொண்டு போனால் என்ன? அவனுக்குத் தெரியாத தெருவா இந்த ஊரில் இருக்க்ப்போகிறது என்று நினைத் தான். சோமு பிரமநாயகத்திடம் சொல்லி விடுவானோ என்றும் பயந்தான். கூடியவரை தான் பூர்ணாவின் வீட்டுக்குப் போவது எவருக்கும் தெரியாமல் இருப்பது . நல்லது என்று அவனுக்குத் தோன்றியது. உடனே சோமு வைக் கூப்பிடும் எண்ணத்தைச் கைவிட்டான். அவன் இவ்வாறு சிந்தித்துக்கொண்டு நின்ற போது- -

"நல்லது. நான் விடைபெற்றுக் கொள்கிறேன். நாம் பின்பு சந்திப்போம்'-என்று சபாரத்தினம் விடைபெற்றுக் கொண்டார். இவரிடமே கேட்டால் என்ன? என்று எண்ணிச் சிறிது தயங்கினான் அவன், ! - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/130&oldid=597271" இலிருந்து மீள்விக்கப்பட்டது