பக்கம்:பிறந்த மண்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பிறந்த மண் சரியாக இருந்தால் உங்களுக்குப் பயன்படக் கூடிய சில முன்னெச்சரிக்கைகளை நான் அளிக்கலாமென்று நினைக் கிறேன்."- - - சபாரத்தினம் மனத்தில் என்ன எண்ணிக்கொண்டு அவர் இப்படிச் சொல்லுகிறார் என்று அழகியநம்பிக்குத் தெரியவில்லை.அவன் திகைத் தான்; ஒன்றும் புரியாமல் தயங் கினான். சபாரத்தினம் தங்கமான பிள்ளைதான். வஞ்ச கமேர், கபடமோ உள்ளவராகத் தெரியவில்லை. அவரிடம் சொல்வதனால் என்ன கேடு வந்துவிடப் போகிறது?-என்று ஒரு கணம் துணிந்தது அவன் மனம். யார் எப்படிப் பட்ட வர்களோ? இரண்டொரு மணி நேரப் பழக்கத்திற்குள் ஒருவரைப் பற்றி நாம் எப்படித் தீர்ம்ானிக்க முடியும்?எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ?யார் கண்டார்கள்?இந்த இளைஞரை நம்பிச் சொல்லலாமா? கூடாதா?-என்று மறுகணமே மறுத்தது அவன் மனம். சிலவிநாடி மனத்தோடு போராடினான் அவன். வேண்டாம்! நீங்கள் சொல்லா விட்டால் பரவாயில்லை. ன்னக்கா நீங்கள் வீண் மனத் துன்பம் அடையக் கூடாது'-என்று சபாரத்தினம் மறுபடி யும் மன்னிப்புக் கேட்ப்து போன்ற குரலில் கூறினார். கூறி விட்டு அவன் கேட்ட தெருவுக்கு வழி சொல்லத் தொடங்கி விட்டார் - சபாரத்தினம் கொஞ்சம் இருங்கள். நாம் இருவ்ரும் சேர்ந்தே வெளியில் போகலாம். பேசிக்கொண்டே போக லாம். போகும்போது எல்லா விவரங்களும் உங்களுக்கு நான் கூறுகிறேன். உங்களுடைய எச்சரிக்கைகளையும் நான் கேட்டுக் கொள்கிறேன்"-என்று கூறி அவரை இருக்கச் செய்தான் அழகியநம்பி - கடைக்குள்ளேயே சபாரத்தினத்திடம் பூர்ணாவைப் பற்றிக்கூறி அவள் தன்னை வீட்டிற்கு அழைத்திருப்பன் தயும் சொல்லி அவளைப் பற்றி அவர் அபிப்பிராயத்தை அறிந்து கொண்டு விடலாமா என்று எண்ணினான் அழகியநம்பி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/132&oldid=597302" இலிருந்து மீள்விக்கப்பட்டது