பக்கம்:பிறந்த மண்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி 131 சிந்தித்துப் பார்த்ததில் கட்ைக்குள் வைத்து அவளைப் பற்றிப் பேசுவது சரியில்லை என்று பட்டது. • * சபாரத்தினத்தையும் உடன் அழைத்துக்கொண்டு தெரு வில் இறங்கி நடந்தான் அழகியநம்பி. இருவரும் ப்ஸ் நிற்கு மிடம்வர்ை பேசிக்கொண்டே நட்ந்தனர். அங்கே ப்ோய் நின்றதும், சபாரத்தினத்திடம் பூர்ணாவின் விளிட்டிங் கார்டை எடுத்து நீட்டி, 'இவள் தன்னுடைய வீட்டிற்கு ஆறு ஆறரை மணி சுமாருக்கு இன்று வரச்சொல்லி என்னை அழைத்திருக்கிறாள். போகலாமா? வேண்டாமா? உங்கள் அபிப்பிராயம் எப்படியோ அப்படி நான் கடந்துகொள் வேன்”-என்று விவிட்டிங் கார்டில் இருந்த அவள் பெயரைச் சுட்டிக்காட்டி வினவினான் அழகியம்பி, “எனக்குத் தெரியும் நீங்கள் அந்தத் தெருவின் பெயன்ரச் சொல்லி வழி விசாரித்ததுமே நான் புரிந்து அனுமானம் செய்துகொண்டு விட்டேன். அதனால்தாள் அவ்வ்ளவு அக்கறையாகச் சந்தேகப்படுவதுபோல் உங்களிடம் விசாரித் தேன். நல்லவேளையாக இப்போதாவது என்னிடம் கூறினர் களே சரியான சமயத்தில் உங்களை நான் காப்பாற்ற முடிந் திருக்கின்றது” என்று. அதைப் பார்த்தவாறே பதில் கூறி னார் சபாரத்தினம். நீங்கள் இப்போது என்ன சொல்லு கிறீர்கள் சபாரத்தினம்? நான் பூர்ணாவின் வீட்டிற்குப் போகலாமா, கூடாதா?’’ . . அழகியநம்பியின் கேள்வியைக் கேட்டு சபாரத்தினம் சிரித்தார். நீங்கள் கெட்டுப் போகவேண்டும் என்று நான் விரும்பமாட்டேன். என்னுடைய அன்புக்குரிய நண்பராக மனத்தில் இடம் பெற்று விட்டீர்கள். இன்று நீங்கள் ஒரு தவறான இடத்தில் போய்மாட்டிக்கொள்ள நான் சம்மதிக்க ம்ாட்டேன். என்னால் இவ்வளவுதான் கூறமுடியும். இதற்கு மேல் உங்கள் விருப்பம் போல் நீங்கள் செய்துகொள்ள லாம்.'-சார் ரத்தினத்தின் குரலில் அழுத்தம் ஒலித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/133&oldid=824782" இலிருந்து மீள்விக்கப்பட்டது