பக்கம்:பிறந்த மண்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த் நர், பார்த்தலால் 133 சிறிது நேரக்தில் பஸ் வந்தது. இருவரும் ஏறிக் கொண் டார்கள். நாமொன்று நினைத்தால் அது ஒன்று நடக்கிறது. இந்த இளைஞர் சபாரத்தினம் நம்மைச் சந்தித்துப் பேச இன்று வரப்போகிறார் என்று கனவிலாவது நினைத்திருந் தோமா? இந்த இளைஞர் வந்திருக்காவிடில் பூர்ணாவைப் புற்றி பிரமாதமாக நினைத்துக்கொண்டு அவள் வீட்டுக்குப் போக நேர்ந்திருக்கும். நல்ல வேளையாக வந்து தடுத்தாட் கொண்டார்என்று பஸ்ஸில் போய்க் கொண்டிருக்கும் போதே தனக்குள் நினைத்துக் கொண்டான் அழகியநம்பி, கழனியாவில் இறங்கியதும் புனிதமும், புகழும் வாய்ந்த பெளத்த ஆலயத்திற்கு அழகியநம்பியை அழைத்துக் கொண்டு போனார் சபாரத்தினம். கண்கொள்ளாக் கவின் மிகுந்த தெய்விகக் காட்சிகளை அங்கே கண்டான் அழகிய நம்பி. புத்தபிரானைப் பற்றியும், அவருடைய ப்ொன். மொழிகளைப் பற்றியும், கல்லூரி நாட்களில் படித்திருந்த புத்தகங்களெல்லாம் அவன் நினைவில் மலர்த்தன. உள்ளத் திம் நிர்மலமான தூய எண்ணங்கள் அந்த இடத்திற்குள் துழையும்போது தாமாகவே உண்டாயின. உடல் முழுதும் சாமானியமான உணர்வுக்கு அப்பாற்பட்ட ஒரு பக்திச் சிலிர்ப்பு உண்டாயிற்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பெற்ற பெளத்த ஸ்தூபி (ட கோபா) ஆலயத்துக்குள் பதிக்கப் பெற்றிருந்த அற்புதமான சந்திர காந்தக்கற்கள், புண்ணிய்ம் நிறைந்த பழைமையான பேர்தி மரம்- எல்லாவற்றையும் சபாரத்தினம் சுற்றிக் காண்பித் தாா. x . மழுங்க மொட்டையடித்துக்கொண்ட தலையும் கண் ணைப் பறிக்கும் பளீரென்ற மஞ்சள் நிற ஆடையும். தர்த்த' புத்த துறவிகளைக் காணும்போதும், இரு உள்ளங்கை, களும் நிறையத் தாமரை, அல்லி, முதலிய பல நிற மலர் களை ஏந்திக்கொண்டு பயபக்தியோடு வழிபாட்டுக்கு வரும் சிங்கள யுவதிகளைப் பார்க்கும்போதும் அவன் நெஞ்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/135&oldid=597305" இலிருந்து மீள்விக்கப்பட்டது