பக்கம்:பிறந்த மண்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

★ 134 - பிறந்த மண் உணர்ச்சி மயமாக மாறியது. கழனிபா ஆலயமும் அது அமைந்திருந்த இயற்கையழகு மிக்க சூழலும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தன - - சுற்றிப் பார்த்துவிட்டு ஒரு பெரிய அரச மரத்தின் கீழ்ப் பரந்த புல்வெளியில் ஒதுக்குப் புறமாக உட்கார்ந்தனர் சபா ரத்தினமும் அழகியநம்பியும். சில கணநேரம் மெளனத்தில் கழிந்தது. இருவரும் ஒருவரோடொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கீழே குனிந்து புல்தரையைக் கீறிக் கொண்டே சும்மா உட்கார்ந்திருந்தனர். இருந்தாற்போலி ருந்து சபாரத்தினம் நிமிர்ந்து உட்கார்ந்து அழகிய நம்பியை நோக்கி, அவனுக்கு மட்டுமே கேட்கும்படி மெதுவான குரவில் பேச்சைத் தொடங்கினார் நான் ஏதோ பொழுது போகாமல் பூர்ணாவின்மேல் எனக்குள்ள சொந்த வெறுப்பின் காரணமாக இங்கே உங்க ளைக்கூட்டிக்கொண்டுவிந்து ஏதேதோ கதைக்கிறேனென்று நீங்கள் நினைத்துக் கொள்ளக்கூடாது. உங்கள் நன்மைக் காகவே இவற்றை உங்களிடம் சொல்லி எச்சரிக்கிறேன்" என்று நீங்கள் நம்பினால்தான் நல்லது." சபாரத்தினம் பீடிகையோடு ஆரம்பித்தார் "சபாரத்தினம். நீங்கள் இன்னும் என்னைச் சரியாக நம்பவில்லை போலிருக்கிறது. உங்களுடைய வாயிலிருந்து வரும் எந்தச் சொற்களும் எனக்கு நன்மை தருவனவாகவே இருக்குமென்று நான் உறுதியாக நம்புகிறேன்.”-அழகிய நம்பி உறுதிமொழி கூறினான். 'நல்லது அந்த நம்பிக்கை இருந்தால் போதும்"-என்று சொல்லிவிட்டுச் சபாரத் இனம் இலேசாகச் சிரித்துக்கொண்டார். அவ்வளவு நேர மாக அவருடைய முகத்தில் தோன்றாமல் மறைந்துவிட்டி ருந்த பழைய சிரிப்பு அது - "நீங்கள் தமிழ் நாட்டிலிருந்து நல்ல நம்பிக்கை களோடும், ஆசையோடும் கடல் கடந்து வந்திருக்கிறீர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/136&oldid=597307" இலிருந்து மீள்விக்கப்பட்டது