பக்கம்:பிறந்த மண்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி . 135 பிரமநாயகம் உங்கள் உள்ளத்தில் எத்தனையோ பல ஆசைக் கனவுகளைத் தூண்டிவிட்டு உங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாம்.என்னுடைய வார்த்தைகள், நான் சொல்லப் போகின்ற செய்திகள் - உங்களுக்கு அவநம்பிக்கையையும் நிராசையையும் உண்டாக்கினால் அதற்காக நீங்கள் வருத்தம் அடையக்கூடாது. பொறுமையாக- அச்சமோ, வியப்போ அடையாமல் கேளுங்கள். சொல்லுகிறேன். 'இப்போது பிரமநாயகம் உங்களை எந்த இடத்தில், எந்தப் பதவியில், உட்கார்த்தியிருக்கிறாரோ, அதை நினைத்து நீங்கள் மதிப்போ, பெருமையோ, கொண்டாடு வதற்கில்லை. மற்றவர்கள் நினைத்து அனுதாபப்பட வேண்டிய் ஓர் இடத்தில் பிரமாதமாக உங்களைக் கொண்டு வந்து உட்கார்த்தி விட்டார்.” : - 'அழகியநம்பி பதில் சொல்லாமல் தலைகுனிந்து கேட்டுக் கொண்டிருந்தார். கயிறுதான்' என்று நினைத்துத் துணிவுடனே காலால் மிதித்துவிட்ட பொருள் மிதித்த வுடன் நெளிந்து புஸ்ஸென்று சீறிப் படத்தை உயர்த்தி னால் எப்படியிருக்குமோ, அப்படியிருந்தது அவன் நிலை. சபாரத்தினம் மேலும் தொடர்ந்து கூறவானார்: "அந்தப் பெண் பூர்ணாவின் பகட்டிலும், இளமையிலும், அருவி போலக் கொட்டும் ஆங்கிலப்பேச்சின் விேஷத்திலும் நீங்கள் மயங்கிவிடக் கூடாது. எதையும், எப்போதும் செய் வதற்குத் துணிவுள்ள வஞ்சகி அவள். இந்த வயதில் அவ ளுக்குத் தெரிந்திருக்கிற சூழ்ச்சிகள், எந்த வயதிலும் வேறு எவருக்கும் தெரிந்திருக்க முடியாதவை. அவளை இங்கிருந்து எப்படியும் கிளப்பிவிட வேண்டுமென்று பிரமநாயகம் தலை கீழாக நின்று பார்க்கிறார். அவரால் முடியவில்லையே! அவள் இல்லாதபோது தாறுமாறாக அவளைப்பற்றிப் பேசு வார் அவர். எனக்குக் கீழே என்னிடம் சம்பளம் வாங்கித் தின்கிற கழுதைக்கு இவ்வளவு திமிரா? என்று இரைவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/137&oldid=824790" இலிருந்து மீள்விக்கப்பட்டது