பக்கம்:பிறந்த மண்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 - பிறந்த மண் இப்படி ஏழைகளின் வயிற்றெரிச்சலை எல்லாம் கொட்டிக்கொண்டு காசு சேர்த்துப் பணக்காரர் ஆனவர் அவர். வட்டிக்குக் கடன் கொடுத்து வாங்கும் தொழிலில் ஈவு, இரக்கம், நியாயம்-இவையெல்லாம் பார்த்தால் முன்னுக்கு வரமுடியாதென்பது அவர் கருத்து. அந்தக் கருத்தை வாய்க்கு வாய், பேச்சுக்குப் பேச்சு,-சமயம் நேரும் போதெல்லாம் மற்றவர்களிடம் சொல்லிப் பெரு மைப்பட்டுக் கொள்வார் அவர். மற்றவர்களால் பெருமைப் படுத்தப்படாதவர்கள் வேறு எப்படித்தான் பெருமையை அடைய முடியும்? தங்களைப் பற்றித் தாங்களே அப்படி ஏதாவது சொல்லிக் கொண்டுதானே பெருமை பெற வேண்டும்? சந்தர்ப்ப்ம் நேரும்போது கடன் தொகைக்கு ஈடாக, வீடோ, நிலமோ,-எதையும் ஜப்தி செய்து: அபகரித்துக் கொள்ளத் தயங்கம்ாட்டார். . இதனால் ஊரிலுள்ள நல்ல விளை நிலங்களில் பெரும் பாலானவை அவருக்கு ச் சொந்தமாயிருந்தன. வீடுகளிலும் இரண்டு மூன்று அவர் வசமாயிருந்தன, அப்படி வந்த வீடு களையெல்லாம் குடியிருப்பவர்களுக்கு வாடகை பேசி விட்டி ருந்தார். அந்தச் சிறிய ஊரில் மாதத்திற்கு இரண்டு ரூபாய் மூன்று ரூபாய்க்கு வசதியுள்ள வீடுகள் வாடகைக்குக் கிடைத்து வந்தன. அந்த முறையை மாற்றி எட்டு ரூபாய், பத்து ரூபாய் என்று வீட்டு வாடகை உயரக் காரணமா' யிருந்தவரே அவர்தாம் . . இவையெல்லாம் போதரதென்று இப்போது சில மாதங் களாக வட்டிக்கடைப் பன்னீர்ச்செல்வம் இன்னொரு புதிய தொழிலின் மூலமும் பணம் குவிக்கத் தொடங்கியிருந்தார். அந்த ஊரைச் சுற்றி நாற்புறமும் இருந்த மலைத்தொடர் களில் விறகுக்குப் பயன்படும் மரங்கள் கணக்கில்லாமல், இருந்தன.அவற்ைற மலைப் பகுதிகளிலே வெட்டிக் கரிக்காகச் மூட்டம்போட்டு எரித்துக் கரிமூட்ட்ைக்ளாக மாற்றினால்" பக்கத்து நகரங்களில் மூட்டை நாலு ரூபாய்-ஐந்து ரூபாய்க்கு விலைபோயி ற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/144&oldid=597317" இலிருந்து மீள்விக்கப்பட்டது