பக்கம்:பிறந்த மண்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 பிறந்த மண் தான். முடியுழானால் இதை எடுத்துக் கொள்ளுங்கள்"என்று வல்வழக்குப் பேசுவார்கள். அன்தயே ஒரு சாக்காக வைத்துக்கொண்டுகோர்ட் மூலம் வீட்டைக் கைப்பற்றி விடில்ாம். அசலைக் கேட்டாலாவது, இரண்டு வருஷம் தவணை பாக்கியிருக்கிறதே-என்று மறுத்துச் சொல்லு வார்கள்.அதுவும் நியாயந்தான்,வட்டியே ஐநூறு ரூபாய்க்கு மேலாகிறது! தரப்போகிறீர்களா? இல்லையா?- என்றால் அவர்களுக்குப் பேச வாயில்லை. இப்போதுள்ள நிலையில் அழகியநம்பியின் தாயும், தங்கையும் எனக்கு ஒரு சல்லிக் 岛雳了芯 தரமுடியாது. கொழும்பில் போன புதிதில் அழகிய நம்பியர்லும் அவ்வளவு பணம் சேர்த்து அனுப்ப முடியாது. நான் மட்டும் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் முயற்சி செய்தால் அந்த வீடு நிச்சயம் என் வசத்திற்கு வந்து விடும். என்று ஒரு மாதிரித் தீர்மானம் செய்துகொண்டிருந்: தரர் பன்னீர்ச்செல்வம். அக்காலத்தில் பெட்ரோல் . கிண்டப்பது கடினமாக இருந்ததால், சர்வீஸ் பஸ்கள், சாமான் ல்ர்ரிகள்-எல்லாம் கரியில்தான் ஓடின. பன்ன்ர்ச்' செல்வத்தின் கரி, விறகு,-தயாரிப்புத் தொழில் பெருகுதற்கு; அமோகமான சூழ்நிலை வாய்த்திருந்தது ம்னிதர் பணத்தை மலையாகக் குவித்தார். அவ்வளவு பனத்தை ஆள்கிறவருக்குக் கிட்டங்கி வைத்துக் கொள்ள ஒரு வீடு தானா கிடைக்காது?.செண்டுக்குப் பத்து ரூபாய் விதம் பணம் கொடுத்தால் ஊர்க்கோடியில் அருமையான காவி மனை விலைக்குக் கிடைக்கும். அந்தக் காலி மனையை விலைக்கு வாங்கி நூறுருபாய் செலவழித்தால் ஒரே சமயத் தில் நானூறு ஐநூறு கரி முட்டைகளையும், துர்து டன் விறகையும் அடுக்கும்படியான ஒரு பெரிய கொட்டதை போட்டுவிடலாம். . . . . . . . ஏனோ, அந்தப் பணக்காரருக்கு அது தோன்றவே. இல்லை. அழகியநம்பி என்ற ஓர் ஏழையின் வீட்டைத்தான் அவருட்ைய் கண்கள் தேடின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/146&oldid=597322" இலிருந்து மீள்விக்கப்பட்டது