பக்கம்:பிறந்த மண்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 145 அன்று வீடுதேடிச் சென்று அழகியநம்பியின் தான்யப் பார்த்துப் பதினைந்து நாட்களில் வட்டிப் பணம் கைக்கு வந்து சேராவிட்டால் நான் மிகவும் கெட்டவனாக நடந்து கொள்வேன்’-என்று மிரட்டிய போதுகூட அந்த வீட்டை வசப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தோடுதான் மிரட்டி விட்டு வந்திருந்தார். அப்போதிருந்து பதினைந்து இருபது நாட்களில் அந்த வீடு தம் வசமாகிவிடும் என்று ஒவ்வொரு நாளும் கோழிக் கன்ாக் கண்டு கொண்டிருந்தார் அவர் • 寒 率 பன்னீர்ச்செல்வம் இப்படி ஏதாவது செய்துவிடுவார் என்பதை அவர் வந்து விசாரித்துவிட்டுச் சென்ற விதத்தி லிருந்தே அனுமானித்துக் கொண்டிருந்தாள் அழகிய நம்பியின் அன்னை. பிள்ளையும் ஊரில் இல்லாத சம யத்தில் இருக்கிற ஒரே ஆதரவான வீட்டை இழந்துவிடக் கூடாது. என்ன முயற்சி செய்தாவது, வட்டிப் பணத்தை இந்த மனிதன் முகத்தில் விட்டெறிந்து விட்டால், இன்னும் ஒரு வருடத்திற்கு இவன் நம் வீட்டு வாசல்படியை மிதிக்க முடியாது. கடன் நோட்டுக் காலாவதியாவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறதே!-என்று எண்ணிக் கொண்டு ஒரு தீர்மானத்தோடு காந்திமதி ஆச்சியின் இட்டிலிக் கடைக்கு வந்திருந்தாள் அந்தம்மாள். காந்திமதி ஆச்சியின் கையில் ரொக்கமாகக் கொஞ்சம் இருப்பு உண்டு என்பது முத்தம் மாள் அண்ணிக்குத் தெரியும். தான் வீடு தேடிப் போய்க் கேட்டால் ஆச்சி மறுக்கமாட்டாள் என்ற நம்பிக்கை அந்த அம்மாளுக்கு இருந்தது காந்திமதி ஆச்சியைச் சந்தித்த முத்தம்மாள் அண்ணி சிறிதுநேரம் பொதுவான செய்திகளைப் பற்றிப் பேசிக் * கொண்டிருந்துவிட்டுப் பின்பு தான் வ்ந்த காரியத்தைப் பிரஸ்தாபித்தாள் - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/147&oldid=597424" இலிருந்து மீள்விக்கப்பட்டது