பக்கம்:பிறந்த மண்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பிறந்த மண் அழகியநம்பியிடமிருந்து இன்றைக்கு எனக்கும் ஒரு கடிதம் வந்திருக்கிறது. அதில்கூடப் பொதுவாக ஏதோ எழுதியிருந்தான். 'அம்மாவும் தங்கையும் ஊரில் தனியாக இருக்கிறார்கள். நீங்கள் அடிக்கடி உதவிகள் செய்து பார்த்துக் கொள்ளவேண்டும்’-என்று போகும்போது சொல்லி விட்டுப் ப்ோயிருக்கிறான். நமக்குள் ஒருத்தருக் கொருத்தர் விட்டுக்கொடுத்துவிடவா போகிறோம்?' என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் ஆச்சி.

ஆச்சி! உங்களுக்குத் தங்கமான மனசு. எனக்குத் தெரி யாதா என்ன? அந்தக் காந்திமதி அம்மனை எல்லாரும் தெய்வமாகக் கும்பிடுவதுபோல் நான் உங்களையும் கும்பிட வேண்டும். இந்த இக்கட்டான சமயத்தில் என்னைக் கை விட்டு விடாதீர்கள். அந்தப் படுபாவி பன்னிர்ச்செல்வம் வீட்டையும் பிடுங்கிக்கொண்டு என்னையும் என் பெண் ணையும் நடுத்தெருவில் நிறுத்திவிடவேண்டுமென்று நினைத்துக் கொண்டிருக்கிறான். நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்."-முத்தம்மாளண்ணியின் சொற்கள் துக்கமும், கவலையும் தோய்ந்து வெளிவந்தன

"நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம் அம்மா! உங்கள் பிள்ளையின் தங்கமான மனத்திற்காகவே நான் எவ்வளவோ உதவி செய்யலாமே! அந்த மாதிரி உங்களுக்கு எதுவும் யாரும் கெடுதல் செய்வதைப் பார்த்துக் கொண்டு நாங்கள் சும்மா விடுவோமா? அந்தப் பன்னீர்ச்செல்வத் துக்குக் கேடுகாலம் வந்துவிட்டது போலிருக்கிறது. இல்லை . யானால் இப்படிப் பேராசை பிடித்துப்போய்த் திரியமாட் டான். மலையிலிருக்கிற மரங்கள்ை. மெர்ட்டையடித்துக் காக சேர்க்கிறது போதாதென்று ஏழை எளியவர்களையும் மொட்டையடித்து அவர்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளப் பார்க்கிறான். ஊரில் இவனை ஏனென்று கேட் பார் இல்லையா?." .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/148&oldid=597426" இலிருந்து மீள்விக்கப்பட்டது