பக்கம்:பிறந்த மண்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

і г.

நா. பார்த்தசாரதி 147

காந்திமதி ஆச்சியின் வார்த்தைகள் அழகியநம்பியின் தாய்க்குச் சிறிது தைரியத்தை உண்ட்ாக்கின

'வட்டியை மட்டும்தானே இப்போது கொடுக்க வேண்டும்? அசலுக்கு இன்னும் நாள் இருக்கிறதோ இல்லையோ?” ஆச்சி கேட்டாள்

"ஆமாம்! வட்டிதான்; இரண்டு வருஷத்துப் பாக்கி நிற்கிறது. ஐநூறு ரூபாய்வரை சேர்ந்து விட்டது அதைக் கொடுத்து ஒழித்துவிட்டால் இன்னும் ஒரு வருஷத்துக்கு அசலைப் பற்றிப் பேசமுடியாது.” . .

'ஐநூறு ஆகுமா?” 'ஏன் ஆச்சி உங்கள் கைவசம் இப்போது அவ்வளவு

இருக்காதா?” - .

'இல்லாமல் என்ன? இரண்டு நாளில் புரட்டிவிடலாம். எதற்கும் நாளை அல்லது நாளன்றைக்குக் கோமுவிடம் சொல்லி அனுப்புகிறேன். நீங்கள் இங்கே வாருங்கள், பன்னீர்ச்செல்வத்தையும் இங்கேயே வரச்சொல்லிக் கூப் பிட்டு அனுப்புகிறேன். மணியக்கார நாராயணபிள்ளை 'யைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பத்திரத்தில் வட்டியை வரவு வைத்துவிட்டுப் பணத்தைக் கொடுத்து விடுவோம். நாமாகவே பணத்தைக் கொடுத்து வரவு வைத்துவிடலாம். இருந்தாலும் ஓர் ஆண்பிள்ளை பக்கத்திலிருந்தால் நல்லது தானே?”-என்று காந்திமதி ஆச்சி கூறியபோது கவலைப் பட்டுக் கொண்டிருந்த முத்தம்மாளண்ணியின் மனம் குளிர்ந்தது -

"நல்ல சமயத்தில் கஷ்டமறிந்து உதவி செய்கிறீர்கள். இதை நான் என்றைக்கும் மறக்கமாட்டேன்."-தன் உள். ளத்தில் பெருகும் நன்றியுணர்ச்சியை இந்த சில சொற் களால் காந்ம்மதி ஆச்சிக்குத் தெரிவிக்க முயன்றாள்முத்தம் மாளண்ணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/149&oldid=597513" இலிருந்து மீள்விக்கப்பட்டது