பக்கம்:பிறந்த மண்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பிறந்த Ar

'எனக்குக் கூடவா நீங்கள் இத்த் -உபசார வார்த். தைகள் எல்லாம் சொல்லவேண்டும்?'-என்று தன்னடக்க மாகப் பணிவோடு கூறிக்கொண்டாள் காந்திமதி ஆச்சி.

வந்த காரியம் சாதகமாக முடிந்த பெரும்ையில் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டாள் அழகியநம்பி பின் தாய்.

οό ஃ ကိို இரண்டு நாள் கழித்து இப்படி தாம் முற்றிலும் எதிர் பாராத நிகழ்ச்சி நடைபெறுமென்று பன்னீர்ச்செல்வம் கனவில்கூட நினைத்திருக்கமாட்டார். காந்திமதி ஆச்சியின் பெண் கோமு அவருடைய வீடு தேடி வந்து அவரைக் கூப். பிட்டபோது அவரால் நம்பவே முடியவில்லை.

- - i. "என்ன காரியமாக ஆச்சி என்னைக் கூப்பிடுகிறார்?"

"எங்கள் இட்டிலிக் கடையில் அழகியநம்பியின் தாயாரும், மணியக்கார நாராயணபிள்ளையும் உட்கார்ந்து, கொண்டிருக்கிறார்கள். அந்த அம்மாள் உங்களுக்கு ஏதோ -- வட்டிப் பணம் தரவேண்டுமாம். இப்போது அதைக் கொடுத்துவிடலாம் என்றுதான் உங்களைக் கூப்பிட்டுக் கொண்டு வரச் சொன்னார்கள். வரும்போது கடன்பத்தி ரத்தை எடுத்துக் கொண்டு வரச் சொன்னார்கள்.’’ என்று சிறுமி கோமு மூச்சு விடாமல் சொல்லி முடித்தபோது பன்னீர்ச்செல்வத்திற்குப் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இவ்வளவு விரைவில் முத்தம்மாள் அண்ணிக்குப் பணம் எப்படிக் கிடைத்ததென்று வியந்தார் அவர்.

சரிதான்! இந்த காந்திமதி ஆச்சியும்,பெருமாள் கோயில் மணியக்கார நாராயண பிள்ளையும் சேர்ந்துகொண்டு இவளுக்கு பண உதவி செய்திருக்கவேண்டும். இல்லையேல் ஐநூறு ருடாயை இரண்டே இரண்டு நாளில் இவளால் எப். படிச் சேர்க்க முடியும்? அடாடா! நல்ல சமயத்தில் கெடுத்து விட்டார்களே!இன்னும் இரண்டு வாரத்தில் அந்த வீட்டைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/150&oldid=597529" இலிருந்து மீள்விக்கப்பட்டது