பக்கம்:பிறந்த மண்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந்ா. பார்த் தசார தி - 1فف

கைப்பற்றியிருப்பேனே. இப்போது அது முடியாமல் செய்து விடுவார்கள் போலிருக்கிறதே-என்றெண்ணி வருந்தியது. திருவாளர் பன்னீர்ச்செல்வத்தின் உள்ளம்

கடன் பத்திரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு காந்திமதி ஆச்சியின் இட்டிலிக் கடையை நோக்கி நடந்தார் அவர். சிறுமி கோமு அவருக்கு முன்னால் நடந்தாள்.

'வாருங்கள், உங்களுக்காகத்தான் காத்துக் சொண் டிருக்கிறோம். கடன் பத்திரம் கொண்டு வந்திருக்கிறீர் களா?”-என்று பன்னீர்ச்செல்வத்தை வரவேற்று இட்டிலிக் கடைக்குள் அழைத்துக் கொண்டு போனார் மணியக்காரப் பிள்ளை. *-------. .

கடைக்குள் காந்திமதி ஆச்சியும் முத்தம்மாளண்ணியும் பணத்தோடு தயாராகக் காத்துக்கொண்டு இருந்தனர். பத்தே நிமிஷங்களில் காரியம் முடிந்துவிட்டது. வட்டிப் பணத்தை எண்ணிக் கொடுத்துக் கடன் பத்திரத்தில் வரவு வைத்தபின் பன்னிர்ச்செல்வத்தை அனுப்பிவிட்டனர். மணி யக்கார நாராயண்ப்பிள்ளை அருகிலிருந்ததனால் காரியம் துரிதமாக முடிந்துவிட்டது. பாவம் பன்னீர்ச்செல்வம்! நன்றாக ஏமாந்து விட்டார்.

அன்று குறிஞ்சியூரிலிருந்து வெளியேறிய தபால் கட்டுகள் அடங்கிய பையில் இலங்கைக்கு இரண்டே இரண்டு கடிதங்கள் இருந்தன. அந்த இரண்டும் அழகிய நம்பியின் பெயருக்குச் சென்றன என்பதை இங்கே தனியாகக் கூறவும் வேண்டுமோ?

17. நிம்மதியை நாடி... கழனியா பெளத்த ஆலயத்தில் அன்று மாலை சபா

ரத்தினம் கூறிய இரகசியங்களை மனதில் ஏற்றுக்கொண்ட விநாடியிலிருந்து அழகியநம்பியின் மனத்தில் அமைதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/151&oldid=597532" இலிருந்து மீள்விக்கப்பட்டது