பக்கம்:பிறந்த மண்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1s;

புத்ததத்தை வெளியே எடுத்தார். அழகியநம்பி அதைப் ப்ார்த்தான். அது ஒரு திருக்குறள் புத்தகம். சபாரத்தினம் அப்போது அந்தத் திருக்குறள் புத்தகத்தை எதற்காக வெளியில் எடுக்கிறார் என்று அவனுக்குப் புரியவில்லை. ஆனால் சபாரத்தினம் கூறிய சொற்கள் அடுத்த நிமிஷ:மே அதைப் புரிய் வைத்தன்

நண்பரே! குழப்பமோ, கவலையோ ஏற்பட்டால் உங், களிைப் போல் தனிமையையும், சிந்தனையையும் தேடி அவற்றை வளர்த்துக் கொண்டிருக்க மாட்டேன் நான். அவற்றுக்கு மருந்து இதோ இந்தப் புத்தகத்துக்குள் இருக் கிறது” என்று சொல்விக்கொண்டே அதைப்பிரித்து அதில் இவப்பு மையால் அடியில் கோடிட்ட சில தலைப்புகளை அழகியநம்பிக்குக் காட்டினார் சபாரத்தினம்.

அவர் காட்டிய தலைப்புகளில் சிலவற்றை மெல்லிய குரலில் வாய்விட்டுப் படித்தான் அவன். ஊக்கமுடைமை இடுக்கண்ழியாமை-ஆள்வினையுடைமை...” -

'சபாரத்தினம்! இந்த வயதில் உங்களுக்கு இருக்கும் அறிவும், மனத்திட்பமும் எனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கு கின்றன’!-என்று வியப்பு மேவிட்டுக் கூறினான் அழகியநம்பி. கேட்டுவிட்டுச் சிரித்தார் சபாரத்தினம், "இதில் வியப் புக்கு என்ன இருக்கிறது? அனுபவங்களைப் புரிந்துகொண்டு அவற்றிற்கு ஏற்ற சிந்தனையை வளர்த்தால் மனத்திட்பம் தானே உண்டாகிறது!’-அவருடைய பதில் சுலபமாக இருந்தது. . .

அதன் பிறகு சிறிது நேரம் புேசிக்கொள்ளாமல் உட்கார்ந்தனர். இருவரும். பஸ் சென்று கொண்டிருந்தது. எங்கள் விட்டிற்குப் போவதற்கு நான் அடுத்த ஸ்டாப்பில் இறங்க வேண்டும். நீங்களும் என்னோடு, வீட்டிற்கு வருவதாயிருந்தால் அங்கேயே இறங்கிவிடலாம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/155&oldid=597541" இலிருந்து மீள்விக்கப்பட்டது