பக்கம்:பிறந்த மண்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந்ா. பார்த்தசாரதி 159

வந்து உங்கள்ை எழுப்பினார்கள். நீங்கள் எழுந்திருக்க

வில்லை. எழுந்திருந்ததும் சாப்பாட்டைப் போட்டு அங்கே கடைக்குள் வரச்சொல்லி அனுப்புமாறு கூறிவிட்டுப்

போயிருக்கிறார்கள்”-என்றான் சோமு.

சோமு எனக்குப் பசி இல்லை. நீ போய்ச் சாப்பிடு. எனக்கு உடம்பு ஒரு மாதிரி இருக்கிறது. நிம்மதியாகத் துரங்கவேண்டும்’-என்றான் அழகியநம்பி. X

“என்ன செய்கிறதென்று சொன்னீர்களானால் கைப் பக்குவமாக ஏதாவது மருந்து செய்து கொடுப்பேன். அரத் தைக் கஷாயம், இஞ்சி மருந்து ஏதாவது...”

"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். வெறும் அலுப்புத் தான். துரங்கினால் தீர்ந்துபோகும். நீ ஐயாவிடம் சொல்லி விடு"-என்றான் அழகியநம்பி.நொடித்தவன்மேல் நொடித் தவன் தான் அனுதாபம் காட்டுகிறான். அந்த ஏழைச் சமையற்காரன் கைப்பக்குவமாக மருந்து செய்து கொடுக் கிறேன் என்று சொன்னபோது, அந்த உண்மை அனுதா பத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே என்று வருத்த மாக இருந்தது அவனுக்கு. அதே சமயத்தில் பெருமையாக இருந்தது. "நன்றாகத் தூங்குங்கள்! நான் ஐயாவிடம் சொல்லிவிடுகிறேன்” - என்று கூறி விளக்கை அணைத்து விட்டுப் போனான் சோமு. நிம்மதியை நாடியது அவன் உடல். சிந்தனையை நாடியது உள்ளம். அவற்றின் முரண் பட்ட போராட்டம் தூக்கத்தை வரவிடவில்லை. •

18. பயங்கர எச்சரிக்கை

கடைக்குள்ளிருந்த சுவர்க்கடிகாரம் மூன்று மணி அடித், தது. இரவின் அமைதியில் அறைக்குள் கரையில் இழுத்தி: போட்ட மீனைப்போலத் துக்கம் வராமல் புரண்டு கொண்” - டிருந்த அழகிய நம்பிக்கு.அந்த ஓசை தெளிவாகக் கேட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/161&oldid=597556" இலிருந்து மீள்விக்கப்பட்டது