பக்கம்:பிறந்த மண்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - iół

கைகெர்ட்டிச் சிரிக்கிறாள் பூர்ணா, இரண்டு முரடர்களும் அழகியநம்பியை நெருங்கிவிட்டார்கள். அவனால் ஒட முடியவில்லை. மூச்சு இரைத்தது. அடிக்கால்களில் இரத்தம் கட்டிக்கொண்டு விண்விண்’ என்று வலித்தது. ஐயோ என்று அலறிக்கொண்டே அறுந்துவிழும் கொடிபோல் கீழே சாய்ந்தான் அவன். அந்த முரடர்கள் பக்கத்துக்கு ஒருவ ராக வந்து குனிந்து கத்தியை நீட்டுகிறார்கள், .

'சொல், இப்போதாவது சொல், பூர்ணாவின் வழிக்கு வருகிறாயா? இல்லாவிட்டால் இப்படியே, இப்போதேஇந்த நடுத் தெருவில் நீ கொலை செய்யப்ப்டுவாய்'-அவர்கள் அவனை அதட்டிக் கேட்கிறார்கள். அவன் மிரண்டுபோய்ப் பரக்கப் பரக்க விழித்துக்கொண்டு நிமிர்ந்து பார்க்கிறான். பூர்ணா அகன்ற கரிய, பெரிய தன் கண்களைச் சுழ்ற்றிக் கேலியாக அவனைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்துக் கொண்டு நிற்கிறாள். என்ன! இப்போது தெரிகிறதா என் சக்தி? கொடுமைகளின் சூழ்ச்சிகளின் உலகத்துக்கு நான் தான் சர்வாதிகாரி, என் வழிக்கு வந்தவர்களை, எனக்குக் கீழ் என் விருப்பத்துக்கு அடங்கியவர்களை மட்டும்தான் நான் துன்புறுத்தாமல் விட்டுவைப்பேன்’-அந்தக் கொடு மைக்காரி, இறுமாப்புடன் நிமிர்ந்துகொண்டு அலட்சியச் சிரிப்போடு அவனிடம் கூறினாள். அந்தச் சிரிப்பு: அவம் றைச் செய்யும் வரிசையான வெண்ணிறப் பற்கள் அப் படியே தாவி எழுந்திருந்து அவளுடைய ஆட்கள் தன்னைக் கொல்லுமுன் அவற்றை உடைத்துவிட வேண்டும்பேல் துடித்தன அவன் கைகள்.' - -

"சரி இவன் நம் வழிக்கு வரமாட்டான். இவனை இப்போதே தீர்த்துக் கட்டிவிடுங்கள்”-அவள் அவர்களுக்கு உத்தரவிடுகிறாள். கத்தி அவன் நெஞ்சுக்குழியை தெருங்கு கிறது - - - -

演晚< 举冷多哈வில்'....என்று அலறிக்கொண்டே கண்களைஇறுக்கி மூடிக்கொள்கிறான் அவன்:

ဧို ၏ို, - ' ဝါးဒီး

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/163&oldid=597561" இலிருந்து மீள்விக்கப்பட்டது