பக்கம்:பிறந்த மண்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 165:

வேண்டிய சமயங்களில் அதட்டிக் கூப்பிட்டு அதிகாரம் செய்தாள்.ஹோட்டலுக்குப்போய் டி வாங்கிவர ஏவினாள். தபாலாபீசுக்குப்போய் ஸ்டாம்ப்'வாங்கி வரச்சொன்னாள். மேசை மேல் ஒரே தூசியாயிருக்கிறதே, இதையெல்லாம் கவனிக்க வேண்டாமா?-என்று கூப்பாடு போட்டு இரைந்து அவ்னைத் துடைக்கச் செய்தாள்

வழக்கம்போல் மூன்று மணியானதும் போய்விட்டாள். இப்படியே ஒரு விசேஷமும் இல்லாமல் இரண்டு மூன்று. நாட்கள் தொடர்ந்து கழிந்தன. அழகியநம்பி பத்தேகால் மணியிலிருந்து மூன்று மணிவரை பூர்ணா என்ற பயங்கர மான அதிகார சக்தியின் ஏவலாளாகவும், மூன்று மணி யிலிருந்து ஆறு மணிவரை பிரமநாயகத்தின் உண்மை ஊழியனாகவும் நாட்களைக் கடத்தினான். அந்தச் சில நாட்களில் பூர்ணாவின் மெளனமும், தன்னிடம் கடுகடுப் பாகப் பேசி அதட்டி அதிகாரம் செய்கின்ற பண்பும் பழத்தை உண்டாக்கியிருந்தன அவனுக்கு. தாக்குவதற் காகப் பின்வாங்கி ஒதுங்கும் ஆட்டுக்கிடாயின் நினைவுதான் பூர்ணாவைக் காணும்போதெல்லாம் அவனுக்கு உண்டா யிற்று •

நான்காவது நாள் இரண்டு முக்கியமான விஷயங்கள் நடந்தன. அன்று மாலை, பூர்ணிாவிடம் அவன் கையும் களவுமாக அகப்பட்டுக் கொண்டுவிட்டான். அதே தினம் காலையில் அவன் மனம் பெரிதும் கலக்கமடைவதற்குக் காரணமான இன்னொரு நிகழ்ச்சியும் நடந்திருந்தது

காலையில் தபால்காரன் கடைக்குள் வந்து, கடிதங் களைக் கொடுக்கும்போது பூர்ணா வந்திருக்கவில்லை. பிரமநாயகம் பின்கட்டில் கண்டியிலிருந்து வந்திருந்த வியாபார நண்ப்ரொருவரோடு பேசிக்கொண்டிருந்தார். எல்லாக் கடிதங்களையும் அழகியநம்பிதான் தபால்காரனிட மிருந்து வாங்கினான். பிரமநாயகத்தின் பெயருக்கு

பி-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/167&oldid=597570" இலிருந்து மீள்விக்கப்பட்டது