பக்கம்:பிறந்த மண்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176. பிறந்த மண்

வாங்கிக் கொண்டு, சோமு! கடைக்குள் முதலாளி இருக் கிறாரா, பார்த்துவிட்டு வா. நான் கொஞ்சம் வெளியில் போய்விட்டு வரலாம் என்றிருக்கிறேன். அவர் இருந்தால் பார்த்து ஒரு வார்த்தை நேரில் சொல்லிக்கொண்டு போய் விடலாம்"- என்று சோமுவிடம் கூறினான். சோமு பார்த்து வரப்போனான். அவன் திரும்பி வருவதற்குள் சிற்றுண்டி-காபியை முடித்து விடலாமென்று அதில் கவனம் செலுத்தினான். அழகியநம்பி,

சோமு திரும்பிவர பத்து நிமிஷங்கள் பிடித்தன; அவன் வேறொரு செய்தியும் கொண்டு வந்தான். தம்பி முதலாளி வெளியில் போயிருக்கிறார். வாசலில் உங்களைத் தேடிக்கொண்டு அந்தப் பெண்கள் இரண்டு பேரும் வந்திருக் கிறார்கள்; பார்க்க வேண்டுமாம்." - -

“எந்தப் பெண்கள்?" என்ன தம்பி தெரியாததுபோலக் கேட்கிறீர்கள்? அன் றைக்குக் கடற்கரையில் பார்த்துப் ப்ேசிக்கொண்டிருக்க வில்லையா? அதற்குள் மறந்துவிட்டீர்களே சோமு. இதைச் சொல்லிவிட்டு ஒரு தினுசாகச் சிரித்தான்.

"ஒ" வில்லியும் மேரியும் வந்திருக்கிறார்களா? இதேர் வந்துவிட்டேன். ல்ாசலில் நின்றுகொண்டா இருக்கி றார்கள்? அடேடே...கடைக்குள் கூப்பிட்டு உட்காரச் திசால்லேன்' அழகியநம்பியின் பதிலில் ஆவலு: பர்பர்ப்பும் ஒலித்த்ன

'வாசலில் நின்றுகொண்டிருக்கவில்லை. அவர்கள் ஆல் வந்திருக்கிறார்கள். கடை ஒரத்தில் காரை நிறுத்தி ஆற்குள்னேயே உட்கார்ந்திருக்கிறார்க்ள்"- என்று கொல்லி மறுபடியும் சிரித்தான் சோமு.

சோமு:சபாரத்தின்ம் வந்தால் இங்கே அறைக்குள் கூட்கார்ந்திருக்கச்சொல்லு. நான் வாசலில் போய் அவர் 'கண்ணைச் சந்தித்து ன்ன்ன்வென்று கேட்டுவிட்டு வருகிறேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/178&oldid=597597" இலிருந்து மீள்விக்கப்பட்டது