பக்கம்:பிறந்த மண்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீா. பார்த்தசாரதி - 17

ஒன்று தண்ணிரில் நனைந்து கிடப்பதுபோல் தோன்றியது:

பதினேழு, பதினெட்டு வயதுக்கு மேல் இருக்காது. வெண் சங்கு போலிருந்த அழகிய கழுத்தின் வெறுமை இன்னும்

திருமணம் ஆகவில்லை என்று சொல்லியது.

அவன் நிலை தர்மசங்கடமாயிருந்தது. என்ன செய்வ தென்றே தெரியவில்லை. அந்தச் சிறுமியை அவளுடைய வீட்டுக்கு அனுப்பி யாராவது பெரியவர்கள் இருந்தால் கூட்டிக் கொண்டு வரச் சொல்லலாமே என்று தோன்றியது. கீழே குனிந்து அந்தப் பெண்ணின் முகத்தருகே கையை வைத்துப் பார்த்தான். சூடான மூச்சுக் காற்றின் மெல்லிய வெப்பம் கையில் உறைத்தது. பயமில்லை’ என்று ஒடுங்கிய குரலில் தனக்குள் சொல்லிக்கொண்டு 'தங்கச்சி ஒடு....ஒடிப் போய் வீட்டில் யாராவது பெரியவ்ர்கள் இருந்தால் உடனே அவசரமாகக் கூட்டிக்கொண்டு வா’ என்று அந்தச் சிறுமி யைத் துரத்தினான். ஆனால் அவள் போகவில்லை. தயங்கி நின்றாள். சொன்னால் போகமாட்டாயா?’ என்று அதட்டினான் அழகியநம்பி. -

'இல்லை மாமா...வந்து...வந்து..." என்று இழுத்துப் பேசினாள் சிறுமி. -

'போகாவிட்டால் உன் அக்கா உனக்குக் கிடைக்க மாட்டாள். ’’ - - - "வீட்டில் வயதான அம்மாதான் இருக்கிறான். அவளாலே எழுந்திருந்து வரமுடியாது. முடக்குவாதம்,'

" அப்பா, அண்ணா, வேறு யாரும் இல்லையா உங்களுக்கு'

"எல்லாம் அம்மாதான்!” சிறுமி , உதட்டைப் பிதுக் கினாள். பரிதாபகரமானதோர் ஏக்கம் அப்போது அந்தச் சிறுமியின் முகத்தில் படர்ந்தது. * * * x

உங்கள் அம்மா யார்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/19&oldid=596642" இலிருந்து மீள்விக்கப்பட்டது