பக்கம்:பிறந்த மண்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன். பார்த்தசாரதி 189

அதற்குமேலும் தாம் சும்ம்ா நின்றுகொண்டிருந்தால் அவள் சொல்லுகிற குற்றங்களை ஒப்புக்கொண்டது. போலாகும்’-என்று அழகிய நம்பி வாய் திறந்தான். "நீங்கள் ஏதேதோ வீண்பேச்சுப் பேசுகிறீர்கள்! என்னைக் சூப்பிட்ட காரியம் ஏதாவது உண்டானால் சொல்லுங்கள்.”

மூடுங்கள் வாயை! நானா வீண் பேச்சுப் பேசுகிறேன்? இதோ செக் புத்தகம் கையில் இருக்கிறது. இன்னொரு செக்' எழுதுவது எனக்குப் பெரிய காரியமில்லை. ஆனால், உங்களை நான் சும்மாவிடமாட்டேன். இன்னும் பூத்து நிமிஷத்தில் அந்தக் கடிதமும் செக்கும் என் கைக்கு வந்தாக வேண்டும்.' . . . .

அப்பப்பா! ஓர் இளம் பெண்ணின் குரலா அது பிசாசு கத்துவதுபோல இருந்தது. உண்மையிலே அந்த அரட்டலில் பயந்துவிட்டான் அவன்

'எனக்கு ஒன்றும் தெரியாது. செக் எதுவும் உங்கள் மேஜையில் ந ன் பார்க்கவில்லை” அழகிய நம்பியின் பேச்சு அழமாட்டாக் குறையாக வெளிவந்தது

"நீங்கள் செய்திருப்பதெல்லாம் எனக்குத் தெரியும். உண்மையைச் சொல்லி ஒப்புக்கொன்ளாவிட்டால் நான் போலீசுக்குப் போன் செய்துவிடுவேன்.'

வேண்டுமென்றே தன்னை மாட்டிவைப்பதற்கு அவள் ஏதோ சூழ்ச்சி செய்கிறாளென்று அவனுக்குத் தோன்றியது. அவளிடம் எப்படிப்பேசி வெற்றிகாண்ப்தென்து தெரியாமல் திகைத் தான் அவன் - - -

மேஜைமெலிருந்த மணியை அழுத்தித் தட்டினாள் பூர்ணா, கடையில் வேலைபார்க்கும் பியூன் ஒருவன் உள்ளே வந்து அவள் முன்னால் வணங்கி நின்றான். . . .

"முதலாளி உள்ளே-பின் கட்டில் இருப்பார். நீ போய் அவரை நான் கூப்பிட்டிேனென்று இங்கே சுப்பிட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/191&oldid=597629" இலிருந்து மீள்விக்கப்பட்டது