பக்கம்:பிறந்த மண்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 பிறந்த மண்

அழகியநம்பி ஒன்றும் சொல்லவுமில்லை; , நின்ற இடத்தை விட்டு நகரவுமில்லை. பேசாம்ல் அப்படியே நின்று கொண்டிருந்தான்

"உன்னைத்தான் சொல்கிறேன். உள்ளே போய் இரு” வெளியே போகத் துணிந்துவிட்டவனை உள்ளே இருக்கச் சொல்கிறீர்கள் மண்குதிரைகள்ை நம்பி இனி யே நான் ஆற்றில் இறங்கத் தயாரில்லை.” ،مه -

சட்டுத் தனமாக உளறாதே. போ...சொல்வதைக் கே. உள்ளே உன்னுடைய அறையில் போய் இரு."அழகியநம்பி ஸ்பிரிங் கதவைப் படிரென்று. இழுத்து. விட்டுக்கொண்டு வெளியேறினான். சபாரத்தினம் எங்கிருக் கிறார்ென்று தேடித் துழாவின அவன் கண்கள். என்ன. ஆச்சரியம்! சபாரத்தினம் அறை வாசலிலேயே அவனை எதிர்பார்த்துக் கொண்டு நிற்பவர் போல் நின்றார். அந்தச் சமயத்திலும் அவருடைய முகத்தில் நகையைக் கண்டான். "இனி ஒரு நிமிஷம் கூட என்னால் இந்தச் சதிகாரர்களிடம் வேலை பார்க்க முடியாது; என்னோடு அறைக்கு வாருங்கள்: எல்லா விவரமும் சொல்லுகிறேன்-என்று சபாரத்தி. னத்தின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு பின் கட்டுக்குச் சென்றான் அழகியநம்பி -

"சபாரத்தினம்! உங்கள் வாய்க்குச் சர்க்கண்ர போட வேண்டும். பிரமநாயகம் முதுகெலும் பில்லாதவர் என்ப்தை இன்று நிரூபித்துக் காட்டிவிட்டார். அந்தச் சூழ்ச்சிக்காரி பூர்ணா என்னைக் குற்றவாளியாக்குவதற்காகப் பியூனின்க் கைக்குள் போட்டுக்கொண்டு ஏதோ பொய் நாட் ம் நடித்துக் காட்டினால் அதை இந்த மனிதர் உண்மையென்று நம்பி அவள் முன்னாலேயே என்னைக் கண்டிக்கிற்ார்ே' ஆத்திரத்தில் மடமடவென்று மூச்சுவிடாமல் பேசிக் கொண்டே போனான் அவ்ன் n-..

அழகியநம்பி நீங்கள் உணர்ச்சியின் உல்கத்தில் மட்டும் உலவுகிறீர்கள் உண்மை உலகத்தை இன்னும் சரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/197&oldid=597644" இலிருந்து மீள்விக்கப்பட்டது