பக்கம்:பிறந்த மண்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பிறந்த மண்

'வியாபாரிகளுக்கு மட்டும் தானா! வியாபாரிகளை அண்டுகிறவர்களுக்கும் அவையெல்லாம் இருக்கத்தான் வேண்டும். இன்றைய நிலையில் பூர்ணாவும், பிரமநாய கமும், அந்தரங்கத்தில், எலியும், பூனையும்போல வாழ் கிறார்கள். ஆனால் வெளியே எப்படி விட்டுக் கொடுக்காமல் பழகுகிறார்கள் பார்த்தீர்களா? பூர்ணாவை ஒரு வார்த்தை பிரமநாயகம் எதிர்த்துப் பேசினால் நாளைக்கே இத்தனை ஆண்டுகளாக வருமானவரி, விற்பனைவரி;-துறைகளில் ஏமாற்றியுள்ள அத்தனை பொய்க் கணக்குகளையும் அவள் அம்பலமாக்கி விடுவாள். நீங்கள் செக்கைத் திருடிவிட்டதாக அவளும் பியூனும் கூட்டுச் சேர்ந்து பொய் நாடகம் நடிக் கிறார்கள் என்பது பிரமநாயகத்திற்கு நன்றாகத் தெரியும். அதைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்கு அவர் முட்டாளல்லர். அவருக்கு இருக்கும் அறிவைக் கொண்டு இந்த இலங்கையைப் போல ஒன்பது இலங்கையை ஆளலாம். ” -

'அதனால்தான் அந்தப் பெண்பிள்ளைக்கு முன்னால் இரைந்து பேசுவதற்கே பயப்படுகிறாரோ?” -

"அல்ல, அது வியாபாரத் தந்திரம். சந்தர்ப்பம் வாய்த் தால் அவளை அவரோ, அவரை அவளோ, குத்திக் கொலை செய்யத் தயங்க மாட்டார்கள், அப்படி நடந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் அந்தச் சந்தர்ப்பம். வருகிறவரை அவர்கள் இருவரும் பழகுகிறவிதத்தை யாரும் வித்தியாசமாகப் புரிந்து கொள்ள முடியாது.” -

சிறிதுநேரம் இருவரும் பேசாமல் இருந்தனர். "பிரம நாயகம் வருகிற நேரமாயிற்று. அவர் வரும்போது நான் இங்கே உங்களோடு இருந்தால் வித்தியாசமாக நினைக்க நேரிடும். நான் கடைக்குள் போகிறேன், ஆத்திரப்படாமல் நிதானமாக நடந்து கொள்ளுங்கள்”-என்று எச்சரித்து விட்டுச் சென்றார் சபாரத்தினம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/198&oldid=597646" இலிருந்து மீள்விக்கப்பட்டது