பக்கம்:பிறந்த மண்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி 201

'தம்பி! நீ மறுபடியும் அதையே சொல்கிறாயே? நான் உன்னிடம் இரகசியத்தை உடைத்துச் சொன்னாலன்றி என்னை நீ சும்மா. விட மாட்டாய் போலிருக்கிறது. அந்தப் பாவிப் பெண்ணை இப்போதுள்ள நிலையில் நான் வெளிப் படையாகப் பகைத்துக் கொண்டால் இந்தக் கடை, இந்த வியாபாரம், இந்தப் பிரமநாயகத்தின் அந்தஸ்து எல்லாமே கவிழ்ந்துவிடும்.” -

"எவ்வளவு நாள் தான் இப்ப்டிப் பயந்து கொண்டிருக்க முடியும்? நீங்கள் பயப்பட வேண்டியதுதான். ஆனால் நான் இப்படிச் சீரழிய முடியாது -

அதிகநாள் தேவை இல்லை! அதுதான் சொன்னேனே

சீக்கிரமாக இந்த விஷயத்திற்குச் சரியான முடிவு கட்டி விடுகிறேன் என்று.” .

"என்னமோ போங்கள். எனக்கு உங்களுடன் இங்கே புறப்பட்டு வரும்போது இருந்த நிம்மதி வந்தபின்பு இல்லை. சரியாக இராத் தூக்கம்கூடக் கிடையாது. இப்போது இரண்டொரு நாட்களாக எந்த விநாடியில் என் உயிருக்கு, ஆபத்து வருமோ என்று கூடப் பயம் உண்டாகிறது."

'அசட்டுப்பிள்ளை; அந்த்ப் பயம் மட்டும் உனக்கு வேண்டவ்ே வேண்டாம். எதற்கும் பயப்படாதே. தைரிய மாக இரு. வீண். பயமுறுத்தல்களுக்கு மனத்தில் இடங் கொடுத்து உன்னை நீயே. அதை ய ப் டு த் தி க் கொள்ளாதே.” - - -

"நீங்கள் சொல்கிறீர்கள் என் மனம் கேட்கமாட்டே னென்கிறதே! 'காசைத் தேடிக்கொண்டு கடல் கடந்து வந்த இடத்தில் உயிரையும் கொடுத்துவிட்டுப் போய்விட நேருமோ?- என்ற சூழ்நிலை ஏற்பட்டால் பயமாகத்

చిణ ఇత్రా ఉష్ణోపా?" - - *நீ வேண்டுமர்னால் நாளை முதல் ஆபீஸ், அறைக்குள் அவ்ளோடு உட்கார் ந்திருக்க வேண்டாம். தனியாக வேது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/203&oldid=597658" இலிருந்து மீள்விக்கப்பட்டது