பக்கம்:பிறந்த மண்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2łó. . . பிறந்த மண்

இதன்பின் அவர்கள் மறுதான் காலை பிரயாணம் தேர்டங்கப் போவது பந்திப் பேச்சு எழுந்தது. இலங்கை மகளின் இயற்கை வனப்பைக் கவிதை பொழிவது போன்ற அழகான ஆங்கில நடையில் அவனுக்கு வர்ணித் தார் அவர் -

எல்லாவற்றையும் சொல்லிவிட்டு இறுதியில் குமம்புத் தனமாக ஒரு போடு போட்டார் வோட்ஹவுஸ்

'இதென்ன பிரமாதம்? என்னால், இவ்வளவுதான் முடியும். நாளைக்கு நீங்கள் பிரயாணம் செய்கிறபோது ஒரு பக்கம் மேரியும், இன்னொரு பக்கம் வில்லியும் உட்கார்ந்து கொண்டு உங்களை என்ன பாடு படுத்தப் போகிறார்கள், 'பாருங்கள்!” - -

"மிஸ்டர் அழகியநம்பி; உண்மையெனது நினைத்துக் கொள்ளாதீர்கள். அப்பா எங்களைக் கீேகி செய்கிறார். வேறொன்றுமில்லை”-என்றாள் லில்லி

திருமதி வோட்ஹவுஸ் வந்து எல்லாரையும் உணவுக்கு அழைத்தாள். நீண்ட மேஜையில் அழகிய விரிப்பு விரித்துப் பழங்கள், ரொட்டி, வெண்ணெய்-பலவகைக் கரண்டிகள், பிளேட்கள்-யாவும் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. இரு புறமும் வரிசையாக நாற்காலிகள் போட்டிருந்தார்கள். திருமதி வோட்ஹவுஸ் மெதுவாக அழகிய நம்பியின் அருகே அத்து, "பயமோ, கூச்சமோ வேண்டாம். உங்கள் வரவை முன்னிட்டு இன்று இங்கே எல்லாருக்குமே மரக்கறி உணவு நான்'.என்று சிரிததுக்கொண்டே சொன்னாள். பரவா வில்லை! உங்கள் அன்பு எப்படிச் செய்தாலும் ஏற்றுக் கோள்ளக் கடமைப்பட்டவன் நான்"- என்று உபசாரமாகப் பதில் சொன்னான், அவன் .

சாப்பிடும்போதும் வேடிக்கைதான்; சிரிப்புத்தான், கேலிதான்! அழகியநம்பி நினைத்தான்:-ஆகா! இந்த வெள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/212&oldid=597680" இலிருந்து மீள்விக்கப்பட்டது