பக்கம்:பிறந்த மண்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 - பிறந்த மண்

இருந்தது. சுகமான கடற்காற்றின் தழுவலில் கட்டுண்டு நன்றாக உறங்கினான் அவன்.'

காலையில் ஐந்து, ஐந்தரை மணிக்குத் தேநீர்க் கோப்பை யோடு வந்து அவனை எழுப்பினாள் லில்லி. ஐந்தே முக்கால் மணிக்கு அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள். “வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த பிரயாணம் உங்களுக்கு வாய்க் கட்டும்” என்று வோட்ஹவுஸ்சம் திருமதி வோட்ஹவுஸ்-சம் மலர்ந்த முகத்தோடு வாழ்த்துக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார்கள். காலை நேரத்துக் குளிர்ந்த காற்று,காளினுள் புகுந்து முகத்தில் ம்ோதியது. வெள்ளவத்தையின் கலகலப் பான கடைவீதிகளில் எழுச்சியும் ஆரவாரமும் தொடங் காத நேரம் அது. அந்த அமைதியான நேரத்தில் ஆரவாரம் ஒடுங்கியிருந்த வீதிகளைக் கடந்து சென்றது அவர்கள் கார், கதிரவன் ஒளி பரவவில்லை. அவனுடைய வரவுக்கு ஒளி மிகுந்த் நடை பாவாடை விரித்து வைத்ததுபோல் கடல் நீர்ப்பரப்பு, கண்ணுக்கெட்டிய தூரம் பளபளத்துக் கொண் டிருந்தது. இலங்கை மலைக்காட்சிகளைப் பற்றிய வர்ணனை களும் வர்ணப் படங்களும் வழி விவரங்களும் அடங்கிய ஒரு வழிகாட்டிப் புத்தகத்தை அழகிய நம்பியின் கையில் ' கொடுத்தாள் மேரி,

"இந்தாருங்கள்! இதையும் வைத்துக் கொள்ளுங்கள்! தொலைவிலுள்ள காட்சிகளைத் தெளிவாகப்பார்க்கலாம்" என்று தோல் வாருடன் ஒரு தொலைநோக்கிக் கருவியை (பைனாகுலர்) அவன் கழுத்தில் மாலை போடுவது போல் மாட்டிவிட்டாள் லில்லி. அப்படி மாட்டிவிடும்போது சண்பகமொட்டுப் போன்ற நீண்ட மென்மையான, அவள் விரல்கள் அவன் கன்னத்தில் உரசின. அவனுக்குப் புல்லரித் தது. அவர்கள் மூன்று பேருமே பின்வnட்டில்தான் உட் கார்ந்து கொண்டிருந்தனர். வலப் பக்கம் ஒரத்தில் அழகிய நம்பியும், இடப்பக்கம் ஒரமாக லில்லியும், நடுவில் மேரியு மாக அமர்ந்திருந்தனர். முன்வnட்டில் டிர்ைவர் மட்டுமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/214&oldid=597685" இலிருந்து மீள்விக்கப்பட்டது