பக்கம்:பிறந்த மண்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 13

உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் மேல் அன்பு செலுத்துவதில் கூடப் போட்டி போட்டனர் அந்தப் பெண்கள்

'தன்னோடு மட்டுமே அவன் பேச வேண்டும். தான் சொல்வனவற்றை மட்டுமே அவன் கேட்க வேண்டும். தனக்குத் தான் அவன் உரியவன்’ என்று உரிமை கொண் டாடி ஆதிக்கம் செலுத்த முயன்றாள் மேரி. லில்லியும் அதே உரிமையையும், ஆதிக்கத்தையும் அவனிடம் கொண்டாடத் துடித்தாள். தன்னால் அந்தப் பெண்களுக்குள் மனமுறிவு ஏற்பட்டுவிடுமோ என்றுகூடப் பயந்தான் அவன்.

கார், நகர் எல்லையைக் கடந்து இயற்கைவளம் பொலியும் பசுமைக் காட்சிகளுக்கு நடுவே குளிர்ந்த சாலையில் சென்று கொண்டிருந்தது. பச்சைப் பசுந் தோகைகள் மினுமினுக்க அசைந்தாடும் தென்னைமரங்கள், செடிகள், கொடிகள், வயல் வெளிகள், வானத்துமேகங்கள், துாரத்து மலைச்சிகரங்கள். அப்போது அந்த அருங்காலை நேரத்தில் கார் செல்லும்போது இருபுறத்திலும் தெரிந்த எல்லாக் காட்சிகளும் கண்ணுக்குத் தெரியாததொரு பேராற்றலின் விரித், வனப்பைச் சிறிது சிறிதாக மறைத்து ஒளித்துவைத்துக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறு சின்னங் களாக அவன் கண்களில் தோன்றின. அவன் உள்ளம் துள்ளியது.

'இப்போது நாம் போய்க்கொண்டிருக்கும் புகுதிக்குக் கடுவிளை என்று பெயர். இதோ இந்த ஆற்றுக்குக் கழனி கங்கை என்று பெயர் . புத்தகத்தை விரித்து வைத்துக் கொள்ளுங்கள் எல்லாம் தெரியும் -என்று மேரி கூறிய போது,

  • புத்தகமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். எல்லா விவரமும் நான்,சொல்லிக்கொண்டு வருகிறேன். உங்களுக்கு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/215&oldid=597687" இலிருந்து மீள்விக்கப்பட்டது