பக்கம்:பிறந்த மண்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந்ா. பார்த்தசாரதி - , 215

கொண்டே திரும்பிப் பார்த்துப் பதில் சொன்னான் டிரைவர்

மலைநாட்டுக்குச் செல்லும் பல தனித் திணிச் சாலைகள் பிரியக்கூடிய இடமான அவிசாவெளையை அடைந்ததும். கார் நின்றது- காரின் இடக்கைப்புறம் ஒரு மரத்தடியில் சிமெண்டு மேடையில் சிறிய கோயிலும், காசு போடுகிற உண்டியலும் இருந்தன. டிரைவர் காரிலிருந்து இறங்கிப் போய் அருகிலுள்ள கடையில் கற்பூரம் வாங்கிக்கொண்டு வந்தான். அந்தச் சிமெண்டுமேடையில் கற்பூரம் கொளுத்தி வைத்து வணங்கி உண்டியலில் ஏதோ காசும் போட்டு விட்டுத் திரும்பினான். திரும்பினவன் என்ன நினைத்துக் கொண்டானோ, மறுபடியும் கடைகள் இருந்த பக்கமாகச் சென்று ஒரு தேநீர்க் கடையில் மூன்று கிளாஸ்களில் ஆவி பறக்கும் தேநீரைச் சூடாக வாங்கிக்கொண்டு வந்தான்

அழகியநம்பி-மேரி-லில்லி-ஒவ்வொருவரிடமும் ஒவ் வொரு கிளாஸை நீட்டினான்.

"இதென்ன? திடீரென்று.” அழகியநம்பி டிரைவரின் முகத்தைச் சிரித்துக்கொண்டே ஏறிட்டுப் பார்த்தான்!

"சும்மா... வாங்கிக் குடியுங்கள். மலைப்பகுதியில் பிரயாணம் செய்யும்போது சுறுசுறுப்பாக இருக்கும்.”

"உனக்கு வேண்டாமா?* - "நான் அங்கே போய்ப் பருகிவிட்டு வருவேன்! நீங்கள் குடியுங்கள்” அவர்கள் மூவரும் டிரைவரின் அன்பான உபசாரத்தை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டனர்.

. அவிசாவெள்ையிலிருந்து கார் புறப்பட்டபோது "அதென்ன கோயில்? அந்த மரத்தடியில் கற்பூரம் கொளுத்தி வைத்து உண்டியலில் காசு போட்டு வணங் கினாயே?’-என்று அழகியநம்பி டிரைவரைக் கேட்டான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/217&oldid=597692" இலிருந்து மீள்விக்கப்பட்டது