பக்கம்:பிறந்த மண்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 பிறந்த unos

தவும் முடியவில்லை. அவர்களுடைய பிரயாணம் மேலும்

தொடர்ந்தது.

உள்ளத்தை இன்பமயமான நினைவுகளில் ஆழச் செய்யும் இலங்கையின் அந்த மலைப்பகுதிகளில் அளவிட் டுரைக்க முடியாத பல அருவிகள் இருந்தன; மனித இலட் சியத்தின் உயர்வுக்கு நிதரிசனமான உதாரணம் போல் விண்ணைத் தொடும் சிகரங்கள் இருந்தன. பலநிறங்களில் பலவிதங்களில் அது வரை அவன் தன் வாழ்நாளில் பார்த் திராத பூஞ்செடிகள், கொடிகள்-இருந்தன. சிரிக்கச் சிரிக்கப் .ேசி அவன்மேல் அன்பை அள்ளிச் சொரியும் இரண்டு யுவதிகள் அந்த இயற்கையழகை வானளாவப் புகழ்ந்து வருணித்துக்கொண்டு வருகிறார்கள்.

ஆனால், அவன் உள்ளம் அவற்றைப் பார்த்து மகிழாது அவற்றினிடையே உள்ள துன்பத்தைப் பார்த்துப் புழுங் கியது. ரனோ குறிஞ்சியூரின் நினைவுதான் அடிக்கடி அவனுக்கு உண்டாயிற்று. அந்த வளமான வயல்கள்,செழிப் பான ஆறுகள், செல்வங் கொழிக்கும் மலைகள், கோயில், குளல், தன் வீடு, தன் தாய், தன் தங்கை, தனக்கு வேண்டி யவர்கள் எல்லாரையும், எல்லாவற்றையும் எண்ணி ஏங்கி னான் அவன். பிற நாட்டு மண்ணின் வளமான இடத்தில் உடலும், பிறந்த ம்ன்ணில் நினைவுமாக நின்றான் அவன், அத்தனை நாட்களாக அவன் மனத்தில் தலை நீட்டாத ஒரு பயம் ஒரு தனிமையுணர்வு, ஒரு பெரிய ஏக்க்ம்-அப்போது அந்த இடத்தில் சிறிது சிறிதாக உண்டாயிற்று. பிரமநாய கத்தின் சிறுமைகளை உணர்ந்த போதும், பூர்ணாவின் சூழ்ச்சிகளை நினைத்துப் பயந்தபோதும், அந்தச் சூழ்ச்சி களில் ஒன்றிற்கு ஆளான போதும்கூட இந்த மாதிரி உணர்ச்சியோ, ஏக்கமோ, அவனுக்கு ஏற்பட்டதில்லை. அப்போதெல்லர்ம் ஊருக்கே திரும்பி விடலாமா? என்கிற மாதிரி ஒருவிதப் பயமும், வந்து புகுந்த இடத்தின் மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/222&oldid=597704" இலிருந்து மீள்விக்கப்பட்டது