பக்கம்:பிறந்த மண்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நர் பார்த்தசாரத் 223

போல் இருக்கிறீர்கள். கலகலப்பாகப் பேசக்காணோம், உங்கள் முகத்தில் மலர்ச்சி இல்லை. சிரிப்பு இல்லை. இவ்வளவு அழகான புதிய இடங்களைப் பார்க்கும்போது இருக்கவேண்டிய எழுச்சி இல்லை. நீங்கள் எதையோ நினைத்து ஏங்குகிறீர்கள்'- என்று மேரியும் லில்வியும் வெளிப்படையாகவே அவனைக் கடிந்துகொண்டார்கள்.

ஆனால், யார் எப்படிக் கடிந்துகொண்டுதான் என்ன பயன்? அதன்பின் அழகிய நம்பி என்ற அந்த இளைஞன் சிரிக் கவே இல்லை. வேடிக்கைப் பேச்சுகள் அவன் வாயிலிருந்து 'வெளிவரவில்லை. அவன் பூரணமாக மாறிவிட்டவன்போல் அல்லது மாற்றப்பட்டு விட்டவன்போல் மனம் குமைந்து கொண்டிருந்தான். பிரமநாயகம்- பூர்ணா, கடையில் வேலை பார்த்துப் பணம் சேர்த்துக்கொண்டு பணக்கார்னாகத் தாய் நாடு திரும்பும் நோக்கம், லில்லி-மேரி ஆகியோரின் அன்பு, சபாரத்தினத்தின் உண்மை நட்பு, இலங்கை மலைகளின் இயற்கை வளம்- இவர்களில்- இவற்றில், யாரையும்எவற்றையும் பற்றி அவன் மனம் சிந்திக்கவே இல்லை.

நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் தெற்குக் கோடியில் எங்கோ ஒரு மூலையில் மலைகளுக்குள் பள்ளம் தாக்கில் மறைந்து கிடைக்கும் நாடறியாத தன் சின்னஞ்சிறு கிராமத்தைப் பற்றித்தான் அவன் சிந்தித்தான். அங்கே உழைக்க மண்ணில்லையா? அங்கே உள்ளவர்கள் உயிர் வாழ வில்லையா? கடல் கடந்துவந்து, எத்தனையாயிரம் கூலித் தமிழர்கள் தங்கள் இரத்தத்தைத் தங்களுக்குக் கொஞ்சமும் உரிமையில்லாத இந்த மண்ணில் பாய்ச்சிக் கொண்டிருக் கிறார்கள்? நான் மட்டும் என்னவாம்? இவர்கள் போலத் தானே ஒரு பஞ்சைப் பயலாக-பரதைப் பயலாக எவனோ ஒருவனைப் பின்ஆற்றிப் பிழைக்க வந்திருக்கிறேன். இப்படித். தமிழ் நாட்டு உழைப்பும் தமிழ் நாட்டு அறிவும்-தமிழ் நாட்டில் பிழைக்க வழியில்லாமல் கடலைக் கடந்து,வானைக் கடந்து இஷ்டப்படி வந்துகொண்டே இருந்தால் முடிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/225&oldid=597711" இலிருந்து மீள்விக்கப்பட்டது