பக்கம்:பிறந்த மண்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 227

வாக்குள்ள நண்பர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கு ஒரு நல்ல வேலை ஏற்பாடு செய்து தரச் சொல்கிறேன்”-என்று லில்வி கூறியபோதும் அவன் அவளுக்கு ஒரு பதிலும் சொல்ல வில்லை. அவளால் அவனுடைய முகபாவத்திலிருந்து அதை விரும்புகிறானா, இல்லையா என்பதைக் கண்டு கொள்வ தற்கு முடியவில்லை. அவன் நீண்ட நேரமாகப் பேசாமல் மலைத்துப்போய் உட்கார்ந்திருந்தது அந்த இரு பெண் களின் மனத்திலும் சொல்லொணாத வேதனையை உண்டாக் கியது

"இதோ பாருங்கள்! உங்களுக்கு எங்கள்மேல் கோபமா? நீங்கள் ஏன் பேசமாட்டேன் என்கிறீர்கள்?’-அவன் தோளைத் தன் வலக் கைவிரல்களால் செல்லமாகத் தடவிக் கொண்டே சிறு குழந்தை போல் வினவினாள் மேரி.அழகிய நம்பி அவள் கூறியதைக் கேட்டுத் தனக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டான். நான் என்னுடைய துன்பங்க ளையும், துரதிர்ஷ்டங்களையும் எண்ணி எதை எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறேன். பிறந்த நாட்டில் பிழைக்க வழியில்லாமல் இங்கே வந்தால், இங்கே நான் வந்த வேளையில் பார்த்தா இப்படியெல்லாம் நடக்க வேண்டும்? உங்கள் மேல் எனக்கு ஒரு கோபமும் இல்லை' என்று மேரி யையும், லில்லியையும் பார்த்துச் சொன்னான் அவன்.

"வீண் வருத்தப்படாதீர்கள் ஐயா! நீங்கள் இந்தச் சமயத்தில் எங்களோடு இப்படிப் பிரயாணம் புறப்பட்டு வந்தது மிகவும் நல்லதாகப் போயிற்று. அங்கே இருந்தால் மோசடி, கொலை, இவற்றுக்காக.நடைபெறும் வழக்குகளில் நீங்களும் சிக்கிக்கொள்ள நேர்ந்திருக்கும்’ என்று டிரைவரும் அவனைத் திரும்பிப் பார்த்து ஆறுதல் கூறினான். * .

"இனிமேல் அந்தக் கடையையோ அதன் முதலாளி யையோ அதிலுள்ளவர்களையோ உங்களுக்குத் தெரிந்ததா கவே வெளியில் காட்டிக் கொள்ளாதீர்கள்! பேசாமல் எங்கள் வீட்டில் வந்து தங்கி விடுங்கள். இன்னும் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/229&oldid=597721" இலிருந்து மீள்விக்கப்பட்டது