பக்கம்:பிறந்த மண்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ர்ர். பார்த்தசாரதி - ii

"நாங்கள் வருகிறோம், மாமா' சிறுமி கோமு தன் அக்காவின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தாள். அழகிய நம்பி பதில் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் நின்ற இடத்தி லேயே நின்றான். அவள் இரண்டொரு முறை திரும்பிப் பார்த்தாள். அவன் தன்னையே பார்த்துக்கொண்டு நிற்பு தைக் கண்டதும் தலையைத் திருப்பிக்கொண்டாள். அழகிய நம்பி உள்ளத்தில் மிக மெல்லிய பாகத்தின்மேல் கொத்துக் கொத்தாகப் பூக்களை வீசி எறிவதுபோல் ஒர் உணர்ச்சி உண்டாயிற்று. முறுக்கி எழுந்த அந்த உணர்ச்சியைத் தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டு பார்க்க வேண்டியவர் களைப் பார்த்து, ஊருக்குப் போவதைச் சொல்லிக் கொள் வதற்காகப் பெருமாள் கோயில் புறமாகத் திரும்பினான்.

- 'ஆ ஐயோ!” சுரீர் என்று காலில் ஒரு சிறிய கருவேல முன் தைத்துவிட்டது. குளத்தங்கரைக் கருவேல மரத்தி விருத்து உதிர்ந்து ஈரத்தில் மறைந்திருந்த முள் அது. கால்ைத் துர்க்கி முள்ளைப் பிடுங்கினான். பாதிமுள் முறிந்து உள்ளேயே தங்கிவிட்டது! பாதம் சிவந்தது.குருதி கசிந்தது.

3. பிரமநாயகத்தின் கோபம்

சொல்லிக்கொள்ள வேண்டியவர்களைப் பார்த்துச் சொல்லிக் கொண்டபின் பஸ் போக்குவரவு நிலவரங்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்துகொள்வதற்காக அழசிபநம்பி பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தான்.

மணி எட்டரை-ஒன்பது இருக்கலாம். வெயில் சுள்ளென்று உறைத்தது. குளக்கிரையிலிருந்து, ஈர ஆடை க்ளை மாற்றிக் கொள்வதற்காக திரும்பவும் வீட்டுக்கு ஒரு முறை போயிருந்தரின் அழகியநம்பி. வீட்டில் போய் ஆடை மாற்றிக் கொண்டு, சட்டைப் பையில் நனைந்துபோயிருந்த மணிபர்லின் ரூபாய் நோட்டுகளை வெயிலில் காயவைத்து எடுக்கும் வேலையைத் தங்கை வள்ளியம்மையிடம் ஒப்படைத்துவிட்டு அதன் பின்பே மற்றவர்களிடம் விடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/23&oldid=596650" இலிருந்து மீள்விக்கப்பட்டது