பக்கம்:பிறந்த மண்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 - பிறந்த மண்

அந்த செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் நல்ல காரியத்திற்காக வந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

நான் நினைத்துச் சந்தேகப்பட்டது வீண் போக வில்லை. இத்தனை வருடங்களாகப் பிரமநாயகம் விற்பனை வரி.வருமானவரித் துறையில் செய்திருந்த அவ்வளவு மோசடிகளையும் நாற்பது நிமிஷங்களில் அம்பலமாக்கி விட்டார்கள். எல்லா விவரங்களையும் குறித்துக் கொண்டு போலீசுக்குப் போன் செய்தார்கள். போலீஸ் வான்' வந்தது. பிரமநாயகத்தைப் பிடித்துக்கொண்டு போய் விட்டார்கள். போய் இரண்டு மூன்று மணி நேரத்தில் ஜாமீனில் திரும்பி வந்தார் அவர். அவர் திரும்பி வந்த போது பூர்ணா இல்லை. அவள் மூன்று மணி சுமாருக்கு அலுவலக அறையைப் பூட்டிக்கொண்டு போய்விட்டாள். வரும்போது அடிபட்ட புலிபோல் சிறிக்கொண்டு வந்தார், பிரமநாயகம். பூர்ணா தான் காட்டிக் கொடுத்திருக்கிறாள் என்றே சந்தேகமறப் புரிந்து கொண்டார். ஜாமீனில் திரும்பி வந்தபின் அவரைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது. அவர் எங்கும் வெளியே போகவில்லை. பின்கட்டில் அவருடைய அறைக்குள்ளேயே பித்துப்பிடித்த வர்போல் உட்கார்ந்து கொண்டிருந்தார். சோமுவை நெருப்புக் கொண்டுவரச் சொல்லி ஏதோ சில கடிதங்களை யும், கணக்குப் பேரேடுகளையும் பைல்களையும் அறைக்குள் ளேயே கொளுத்தினாராம்.

'அலுவலகச் சாவியைப் பூர்ணா கொடுத்து விட்டுப் போயிருக்கிறாளா? - என்று என்னைக் கூப்பிட்டுக் கேட்டார் r

'இல்லை! வழக்கமாகச் சமையற்கார சோமுவிடமாவது என்னிடமாவது கொடுத்து விட்டுப் போவது உண்டு. இன்றைக்குக் கையோடு கொண்டு போய்விட்டாள் போலி ருக்கிறது-என்று சொன்னேன் நான். சாவியைப் பூர்ணா - கொண்டு போய்விட்டாள் என்று தெரிந்தவுடன் அவர்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/238&oldid=597742" இலிருந்து மீள்விக்கப்பட்டது