பக்கம்:பிறந்த மண்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 பிறந்த மன்.

"ஆமாம்! கஷ்டமோ நஷ்டமோ, அதைப் பிறந்த மண்ணிலேயே அனுபவிக்கத் தீர்மானித்து விட்டேன். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அதை நான் அறிந்து கொள்ளலாமோ?” . . .

'உங்களைப் போலவே எனக்கும் பிறந்த மண் இருக் கிறது. அருமையான வயல்கள்-தென்னந்தோப்பு-எல்லாம் இருக்கின்றன. பேசாமல் வீட்டோடு ஒழித்துக்கொண்டு யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிப் போகப் போகிறேன். ஊரோடு நிலங்கரைகளைப் பார்த்துக்கொண்டும் ஒழிந்த வேளைகளில் தமிழ் இலக்கியங்களைப் படித்துக் கொண்டும் நாட்களைக் கழிக்கப் போகிறேன். மனிதர்களை நம்பி வாழ்வது அலுத்துப் போய்விட்டது! மண்ணை நம்பி வாழ்வதற்குப் புறப்பட்டுவிட்டேன். ஆனால், என் உள்ளத் தில் ஒரே ஒரு நம்பிக்கை மட்டும் உறுதியாக இருக்கிறது. மனிதர்களை நம்பி வாழ்ந்தபோது குறுக்கிடுகிற போட்டி, பொறாமை, சூழ்ச்சி, வஞ்சகம், துரோகம்-இவையெல் லாம் மண்ணை நம்பி வாழும்போது ஏற்படா. அந்த வாழ்க்கையில் அமைதி இருக்கும், இன்பமிருக்கும், பண்பு இருக்கும், தன்னம்பிக்கை இருக்கும்.’’

- இதைக் கேட்டபோது அழகியநம்பிக்கு உள்ளம் சிலிர்த்தது. "ஆகா இந்த சபாரத்தினத்திற்கும், எனக்கும் ஒரே மாதிரி உள்ளத்தை, ஒரே மாதிரிச் சிந்தனையை, படைத்தவன் வைத்துவிட்டானா என்ன? இலங்கையின் மலைப்பகுதியில், தேயிலை, ரப்பர்த் தோட்டங்களில் உழைக்கும் மக்களைப் பார்த்தபோது என் உள்ளத்தில் என்னென்ன எண்ணங்கள் தோன்றினவோ, இதே எண்ணங் . களை இப்போது இவரும் வெளியிடுகிறாரே!-என்று மனத்திற்குள் நினைத்துக்கொண்டான் *

"நீங்கள் என்றைக்கு யாழ்ப்பாணத்திற்குப் புறப்படு கிறீர்கள்?" - . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/242&oldid=597752" இலிருந்து மீள்விக்கப்பட்டது