பக்கம்:பிறந்த மண்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 பிறந்த மண்'

இல்லாவிட்டால், அவருடைய கடை இல்லாவிட்டால், இவ்வளவு பெரிய கொழும்பு நகரத்தில் உங்களுக்கு வேறு நல்ல வேலை கிடைக்காமலா போய்விடும்? நீங்கள் இருக்க மட்டும் சம்மதியுங்கள். நானாயிற்று. இன்னும் இரண்டே நாட்களில் உங்களுக்குச் சரியான இடத்தில் தகுதியான வேலை பார்த்துத் தருகிறேன். ஊருக்குப் போகவில்லை-- என்று மட்டும் ஒரு வார்த்தை சொல்லுங்கள்; போதும்’என்று உள்ளம் உருக வேண்டினார் அந்த வெள்ளைக்கார இராணுவ அதிகாரி. .

சாப்பிடாமல் ஒரு மூலையில் உட்கார்ந்து அவன் ஊருக்குத் திரும்பக்கூடாதென்று அடம் பிடித்தாள் மேரி, வில்லி கண்கள் கலங்கி அவனை ஏக்கத்தோடு பார்த்த ஒவ்வொரு பார்வையும் நெஞ்சைப் பிடித்து உலுக்கியது.

"இவ்வளவு பேர் சொல்லுகிறோமே! நீங்கள் கேட்டால் தான் என்ன? ஆனாலும் நீங்கள் இவ்வளவு முரண்டு பிடிக்கக்கூடாது'- என்று அவனைக் கண்டிப்பது போன்ற குரலில் கூறினாள் திருமதி வோட்ஹவுஸ்

-இவ்வளவும், மாடியறையில் பேசி விட்டு சபாரத்தின மும், அழகியநம்பியும், கீழே இறங்கிவந்த பின்பு நடந்தது. சபாரத்தினமும் அப்போது அங்கேதான் அவர் களோடு இருந்தார். இரு சாராருக்கும் நடுவில் ஒன்றும் குறுக்கிட்டுப் பேசாமல் சிரித்துக்கொண்டே உட்கார்ந் திருந்தார். உலகமே தலைகீழாகக் கவிழ்ந்து நிலைகுலைந்து போனாலும் அந்த முகத்திலிருந்து அந்தச் சிரிப்பு மாறாது போலிருக்கிறது! - . . .

"இவ்வளவு பேர், இவ்வ்ளவு நேரமாகக் கூறியும் கேட்க மாட்டேனென்கிறாரே? நீங்கள் இவருக்கு நெருங்கிய நண்ப ராக இருக்கிறீர்கள். கொஞ்சம் விவரமாக எடுத்துச் சொல்லி இங்கே தங்கச் செய்யுங்களேன்?-என்று சபாரத்தினத்த்ை வேண்டிக்கொண்டார் வோட்ஹவுஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/244&oldid=597757" இலிருந்து மீள்விக்கப்பட்டது