பக்கம்:பிறந்த மண்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 பிறந்த மண்

நம்பி. இன்னும் கொஞ்சம் வற்புறுத்தினால் அவன் வாய் விட்டு அழுதுவிடுவான் போலிருந்தது. அவனுடைய உதடுகள் துடித்தன. கண்கள் சிவந்து கலங்கியிருந்தன. முகத்தில் முத்துமுத்தாக வியர்வை அரும்பியது. கண்களில் தனிப் பட்டதோர் ஒளி மின்னியது. அவன் தெய்வ சந்நதம் வந்தவனைப்போல் காணப்பட்டான்.

அதற்குமேல் யாருக்குமே அவனிடம், அவனை எதிர்த்து ஒரு வார்த்தைகூடச் சொல்லத்தோன்றவில்லை.எப்போதும் சிரிப்பும் கலகலப்புமாக நடைபெறும் இரவுச் சாப்பாடு அன்று அங்கே மிக அமைதியாக நடந்து முடிந்தது. திருமதி வோட்ஹவுஸ் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள் மேரி சாப்பிட வர மறுத்துவிட்டாள். லில்லி கண்ணிருக் கிடையே குனிந்த தலை நிமிராமல் ஏதோ சாப்பிட்ட தாகப் பேர் செய்தாள். யாருமே அன்று சுவையுணர்ந்து விருப்பத்தோடு சாப்பிடவில்லை. ... •

சாப்பாட்டிற்குப் பின் சிறிது நேரம் உட்கார்ந்துகொண் டிருந்துவிட்டு சபாரத்தினம் புறப்பட்டார். 'வீட்டிற்குப் ப்ோய்ப் படுத்துக்கொண்டிருந்துவிட்டுக் காலையில் துறை முகத்திற்கு வழியனுப்ப வந்து விடுகிறேன்'-என்று சொல்லிக்கொண்டே எழுந்திருந்தார் அவர். ஆனால், வோட்ஹவுஸ் அவரைப் போகவிடவில்லை.

  • 'இல்லை மிஸ்டர் சபாரத்தினம்! நீங்கள் இங்கேயே படுத்திருந்து காலையில் எங்களோடு வந்து துறைமுகத்தில் இவரை வழியனுப்பிவிட்டு அப்புறம் வீட்டுக்குப் போய்க் கொள்ளலாம்.”

சரி உங்கள் விருப்பம் அப்படியானால் இருக்கிறேன்." சபாரத்தினம் அங்கேயே தங்கிவிட்டார். அப்போது இரவு எட்டு மணிக்கு மேலாகியிருந்தது.

வோட்ஹவுஸ், திருமதி வோட்ஹவுஸ், சபாரத்தினம், மூவரும் சேர்ந்து அப்போது உடனே கடை வீதிக்குப் போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/246&oldid=597761" இலிருந்து மீள்விக்கப்பட்டது