பக்கம்:பிறந்த மண்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 245

அழகிய நம்பிக்கு அன்பளிப்பாகக் கொடுத்தனுப்பச் சில பொருள்கள், நல்ல பழவகைகள்...எல்லாம் வாங்கிக் கொண்டு வரத் தீர்மானித்தனர். மேரி, லில்லி, அழகிய நம்பி ஆகிய மூவரையும் தனிமையில் விட்டுவிட்டு அவர்கள் காரில் கடை வீதிக்குப் புறப்பட்டுச் சென்றனர். கார் பங்களா வாசலைக் கடந்து சென்றதும் மேரியும், லில்லியும், அழகிய நம்பியின் அருக்ே வந்து தரையில் மண்டியிட்டு உட்கார்ந்துகொண்டு தங்கள் இதயத்தில் குமுறும் உணர்ச்சி களைக் கொட்டத் தொடங்கிவிட்டார்கள். அந்த இரண்டு பெண்களின் நான்கு விழிகள் அவனுடைய காலடியில் கண்ணிரைச் சித்தின -

'நீங்கள் இருவருமே என்மேல் அளவுக்கு மீறிக் குழந் தைத் தனமாகப் போட்டி போட்டுக் கொண்டு அன்பைச் செலுத்திவிட்டீர்கள். இப்போது வேதனைப்படுகிறீர்கள். உங்களுடைய வேதனையை உணர்வதைத் தவிர வேறெது வும் கூற முடியாதவனாக இருக்கிறேன் நான்!”-என்று மனமுருகிக் கூறினாள்.

'இரயில் பிரயாணத்தின்போது தற்செயலாகச் சந்தித் துப் பின் உடனே மறந்துவிடுகிற எத்தனையோ நபர்களைப் போல எங்களையும் நீங்கள் மறந்துவிட நினைக்கிறீர்கள் போலிருக்கிறது”-மேரியின் இந்த்க் கேள்வி அவனுடைய நெஞ்சைச் சுட்டது. சூட்டைத் தாங்கிக் கொண்டான். விவரமாக என்ன பதில் சொல்லி அவர்களைச் சமாதானட் படுத்துவதென்று அவனுக்குத் தெரியவில்லை. தன் மனம் இரக்கமற்ற கல்மனமென்று அவர்கள் நினைத்துக்கொள் வார்களோ, என்ற அச்சம் ஏற்பட்டது. * . .

"நான் தாய்நாட்டுக்குத் திரும்புகிற இந்த நேரத்தில் உங்கள் களங்கமில்லாத அன்பினால் என்னை வேதன்ைட் படுத்துகிறீர்களேயன்றி எனக்கு நிம்மதியாக விடை கொடுக்கமாட்டேனென்கிறீர்கள்!"- அவன் ஏக்கத்தோடு அவர்களைக் கெஞ்சுவதுபோல் வேண்டிக்கொண்டு

பி-16 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/247&oldid=597764" இலிருந்து மீள்விக்கப்பட்டது