பக்கம்:பிறந்த மண்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 பிறந்த மண்

அந்தக் கிழவர் அதற்கப்புறமும் தொணதொணவென்று உப்புச் சப்பில்லாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந் தார். அவனுக்கு எரிச்சலாயிருந்தது. எழுந்து மறுபடியும் கிராதியருகே போய் நின்றான், கப்பலின் அடிப்புறத்தில் வேகமாகக் கிழிபட்டு விலகும் நீரலைகளைக் குனிந்து பார்க் கத் தொடங்கினான். ஊருக்குப் போய்ச் சேர்ந்ததும் யார் யாரிடமிருந்து எத்தகைய வரவேற்புக் கிடைக்கு மென்ற சிந்தனை அவனுக்கு ஏற்பட்டது. அம்மாவுக்கு ஒரு முன் கடிதமாவது எழுதிப் போட்டிருக்கலாம். இப்போ தைக்கு இரண்டு மூன்று வருடங்களுக்கு என் முகத்தையே பார்க்க முடியாதென்று அவள் நினைத் துக் கொண்டிருப் பாள். நான் திடுதிடுப்பென்று போய் நிற்கப் போகி றேன். பாவம் என்னவோ, ஏதோ, என்று பதறிப் போவாள்.' இங்கு நடந்ததொன்றும் அவளுக்குத் தெரிந்திருக்காது. நான் இப்படித் திரும்பி வந்துவிட்டது அம்மாவுக்கும் வள்ளியம்மைக்கும் பெருக்கு ஏமாற்றமாகக் கூட இருக்கும். 'அதிர்ஷ்டங் கெட்ட பிள்ளை, உனக்கு ஒரு நல்ல காரியத்திலும் கைராசி கிடையாது. நீ டோன வேளை பிரமநாயகமும் இந்தக் கதிக்கு ஆளாக வேண்டுமா?” என்று இப்படி ஏதாவது சொல்லி அம்மா தன்னைக் கோபித்துக் கொள்வாளென்று நினைத்தான்.

முதல் ஒரு வாரத்தில் கேட்கிறவர்களுக்குப் பதில் சொல்லி மீளமுடியாது. சிலர் உண்மையான அனுதாபத் தோடு, ஏன் தம்பி? அதற்குள் திரும்பிவிட்டாய்? - என்று கேட்பார்கள். என்ன தம்பீ? கொழும்புக்குப்போய் இரண்டு. மூன்று வாரத்திற்குள்ளேயே பணக்காரனாகத் திரும்பிவந்து விட்டாய் போலிருக்கிறதே!-என்று கிண்டலும் குத்தலு மாசுக் கேட்பார்கள் வேறு சிலர். நான் ஏதோ பணத்தை முட்டை கட்டி வந்திருப்பதாக நினைத்துக்கொண்டு பன்னீர்ச்செல்வம் தம்முடைய கடன் பாக்கியை வசூலிப் பதற்கு வந்துவிடுவார். தூத்துக்குடியில் போய் இறங்கியதும் முதல் காரியமாக சாகேச ைக்க கை கடிதம் எழுதிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/254&oldid=597781" இலிருந்து மீள்விக்கப்பட்டது