பக்கம்:பிறந்த மண்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 - பிறந்த மண்

நம்பிக்கையும் இன்று திரும்பும் போதிருக்கும் வெறுப்பும் அவநம்பிக்கையும்-ஒன்றோடொன்று ஒட்டாத பண்பு, களாக அவன் மனத்தில் தோன்றின. .

அவன் கைகளில் புதுக்கடிகாரமும் மோதிரங்களும் மின்னியதால் அவனைப் பசையுள்ள பணக்காரப் பேர்வழி யாக நினைத்துக்கொண்டு விட்டார்களோ, என்ன்வேர், மூட்டை தூக்கும் கூலிகள் ஈக்கள் போல வந்து மொய்த்துக் கொண்டார்கள். ஒரு கூலியாளிடம் தன் சாமான்களை ஒப்படைத்தான்.

துறைமுகவாயிலுக்கு வந்ததும் அன்று தனிமையில் தன் னைப் பசியோடு தவிக்க விட்டுவிட்டுப் பிரமநாயகம் நுழைந்து சாப்பிட்ட அதே ஹோட்டலுக்குள் இன்று கூலிக்காரனையும் சேர்த்து அழைத்துக்கொண்டு சென்றான் அழகியநம்பி. தான் காப்பி அருந்தியதோடு கூலிக்கார னுக்கும் வாங்கிக் கொடுத்தான் -

பஸ் ஸ்டாண்டை அடையும்போது மணி ஐந்தேகால். குறிஞ்சியூருக்கு ஆறேகால் மணி சுமாருக்குக் கடைசியாக ஒரு பஸ் இருக்கிறதென்று கூலியாள் சொன்னான்.

கசரி இனிமேல் நான் பஸ் ஏறிப் போய்க் கொள் கிறேன்’-என்று சொல்லி அவனுக்குப் பேசிய கூலியை எடுத்துக் கொடுத்தான். .

"இருக்கட்டும் ஐயா, கூலி எங்கே ஒடிப்போகிறது? பஸ் வந்ததும் உங்களை ஏற்றிவிட்டுப் பிறகு வாங்கிக்கொள் கிறேன்'-என்றான் அவன். படித்தவனாயிருந்தாலென்ன? படிக்காத பாமரனாயிருந்தால் என்ன? யார் தன்மேல் அன்பைச் செலுத்துகிறானோ அவன்மேல் தானும் பதிலுக்கு அன்பு செலுத்த வேண்டுமென்று மனிதனுக்குத் தெரிந்திருக் கிறது-ஒரு குவளைக் காப்பிக்காக அந்த மூட்டை தூக்கும் சூலிக்காரன் காட்டிய நன்றியைக் கண்டதும் அவனுக்குப் பெருமையான எண்ணங்கள் உண்டாயின. அப்போது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/258&oldid=597791" இலிருந்து மீள்விக்கப்பட்டது