பக்கம்:பிறந்த மண்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 பிறந்த மண்

களில் பேசவும் படிக்கவும்தான் உரியவை. நடைமுறை உலகத்துக்கும் இவற்றுக்கும் அதிக தூரம்."

முருகேசன் அழுத்தந்திருத்தமாகத் தன் கருத்தை அழகியநம்பிக்கு எடுத்துரைத்தான். ஆனால் இவனுடைய மறுப்புகளைக்கேட்டு அழகியநம்பி தன் இலட்சியத்திலோ நோக்கத்திலோ, சிறிதும் சோர்ந்து போய்விடவில்லை.

"நீ என்ன வேண்டுமானாலும் சொல்லு முருகேசா எனக்கென்று நான் கடைசியாகத் தீர்மானித்துக்கொண்ட இலட்சியம் ஒன்றுதான். இதை தான் எப்படியும் நிறை வேற்றிக்கொண்டே தீருவேன். என் உயிரே போவதாக இருந்தாலும் கிராமத்தை விட்டுப். பிழைப்பதற்கென்று வேறெங்கும் வெளியேறிச் செல்ல மாட்டேன். இன்று இந்த நிமிஷத்தில் உன் கையிலடித்து சத்தியம் வேண்டுமானாலும் செய்து தருகிறேன்."-அழகியநம்பி உணர்ச்சி வசப்பட்டுச் சிறிது இரைந்தே பேசிவிட்டான். புஸ்ஸிலிருந்த சக பயணி களின் கவனத்தைக் கவர்ந்து அவன் பக்கமாகத் திரும்பிப் பார்க்கச் செய்துவிட்டது அந்தப் பேச்சு.

போதும் அப்பா வாயை மூடிக்கொள். உன் ஆவேசப் பேச்சைக் கேட்டுப் பஸ்ஸில் வருகிறவர்களெல்லாரும் நாமிருவரும் சண்டை போட்டுக் கொண்டு இர்ைவதாக நினைத்துக் கொள்ளப் போகிறார்கள். ஊருக்குப் போய் விவரமாகப் பேசி முடித்துக் கொள்வோம்!"-ஸ்ன்று கூறி அழகியநம்பியின் வாயைப் பொத்தினான் முருகேசன்.அதன் பின் பஸ் குறிஞ்சியூரை அடைகிறவரை அவர்கள் இருவரும் பேச்சிலோ, விவாதத்திலோ அதிகம் ஈடுபடவில்லை.

பஸ் மலைப் பாதைகளைக் கடந்து குறிஞ்சியூருக்குப் போய்ச் சேர்ந்தபோது மணி ஒன்பதே கால். இருந்த ச. மான்களைத் துரக்கிக்கொண்டு வருவதற்கென்று தனியாக ஆள் தேடிக் கொண்டிருக்காமல் அழகிய நம்பியும், முருகேச னுமே ஆளுக்குக் கொஞ்சமாகத் தூக்கிக்கொண்டு வீட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/262&oldid=597800" இலிருந்து மீள்விக்கப்பட்டது