பக்கம்:பிறந்த மண்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி . 265

அழகியநம்பி முருகேசனை வாசலில் நிறுத்திவிட்டுப் பல் தேய்க்க உமிக்கரி எடுத்துக்கொண்டு வரு வதற்காகப் பின்கட்டுக்குப் போனான். கிணற்றடியில் பற்றுப்பாத்திரம் விளக்கிக் கொண்டிருந்த வள்ளியம்மையைப் பார்த்ததும், என்ன வள்ளியம்மை செளக்கியம்தானா? -என்று சிரித் துக்கொண்டே விசாரித்தான். அவள், செளக்கியந்தான் அண்ணா" என்று சொல்லிக்கொண்டே கையைக் கழுவி விட்டு அவனருகில் வந்து பாதங்களைத் தொட்டு வணங் கினாள். நன்றாயிருக்கவேண்டும்” என்று கூறி கைகளை உயர்த்தி வாழ்த்துக் கூறினான். .

கும்பிட்டு எழுந்திருந்த வள்ளியம்மையின் கண்களில் அவனுடைய கையிலிருந்த மோதிரம், கடிகாரம், எல்லாம் தெரிந்தன

"அடேடே! இது ஏதண்ணா மோதிரம், எல்லாம்? அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமல், நாங்கள் அருவிக் குக் குளிக்கப் போகிறோம். இவையெல்லாம். இங்கேயே இருக்கட்டும்; இந்தா, உள்ளே வாங்கி வை' என்று மோதிரங்களையும் கடிகாரத்தையும் கழற்றிக் கொடுத் தான். அவன். பின் உமிக்கரியை எடுத்துக்கொண்டு. வாச லுக்கு வந்து முருகேசனையும் அழைத்துக் கொண்டு அருவிக் கரைக்குக் கிளம்பினான் -

போகிறவழியில் அவனைச் சந்தித்த ஒவ்வொருவரும் 'தம்பி கொழும்பிலிருந்து எப்போது வந்தது?" என்று தொடங்கி ஒரு பத்து நிமிஷங்களால்து நிறுத்தி வைத்து விசாரிக்காமல் விடவில்லை. அந்த விசாரிப்பு, அந்தப்பிரிவு, அந்த மரியாதை, எல்லாம் தனக்கா, தான் போய்விட்டு வந்த கொழும்புக்கா என்பதுதான் அழகியநம்பிக்குப் புரியவில்லை. . - t

'தொடர்ந்து கிராமத்திலேயே இருப்பதாயிருந்தால், இந்த மாதிரி விசாரிப்பும், மரியாதையும் உனக்குக் கிடைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/267&oldid=597812" இலிருந்து மீள்விக்கப்பட்டது