பக்கம்:பிறந்த மண்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர். பார்த்தசாரதி 275

போனாலும் நான் நினைத்ததை நிறுத்தமாட்டேன். இத்தன்ை பேரிடமும், இவ்வளவு நாழிகைகளும் கேட்ட அவநம்பிக்கைப் பேச்சுகளெல்லாம் என். நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கின்றன. என்னுடைய பிடிவாதத்துக்கு இராட்சஸ பலத்தை உண்டாக்கியிருக்கின்றன. எனக்கு ஒரு இர்கசியம் நன்றாகத் தெரியும். சாமானிய மனிதர்கள் ஒன்று சேர்ந்துகொண்டு மொத்தமர்க எதிர்க்கிற விஷயம் எதுவோ அதில் இலட்சியவாதிக்கு உறுதியாக வெற்றி கிட்டும்." -

“சரி! உன் இஷ்டம். வா, போகலாம்.' கிராமமுன்சீப் புன்னைவனம் திண்ணையில் உட்கார்ந்து தீர்வை இருசால் கணக்கெழுதிக் கொண்டிருந்தார். அழகிய நம்பியும் முருகேசனும் போனவுடன் எழுந்து வ.வேற்றார். முன்றயான விசாரணை, பதில் எல்லாம் முடிந்தது.அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபோதே முருகேசன் மனுவை எழுதிவிட்டான். அழகியநம்பி அதைப் படித்துப் பார்த்துக் கையெழுத்திட்டு முன்சீப்பிடம் கொடுத்தான்.

அவர் அதை வாங்கி மூக்குக் கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கொண்டு படித்தார். இருவரும் அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். முழுதும் படித்து. முடித்துவிட்டுத் தலைநிமிர்ந்த முன்சீப் முகத்தைச் களித்தார். பின்பு இலேசாகச் சிரிக்க முயன்றார், சிரிப்பு

வரவில்லை! - 8.

30. இருபது நாட்களில்...

எல்லாரும் பாடிய அதே பல்லவியை முன்சீப் புன்னை

வனமும் பாடினார்

அதம்பி! நிலம் கிடைப்பதில் தகராறு ஒன்றும் இருக் காது. இன்றைக்குத் தபாலில் நான் இதைச் சிபாரிசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிறந்த_மண்.pdf/277&oldid=597837" இலிருந்து மீள்விக்கப்பட்டது